Samsung-Google உறவில் சிக்கல்?
சாம்சங்குடனான ஒப்பந்தம் சற்று சிக்கலானது. ஏனெனில், தென் கொரியாவைச் சேர்ந்த இந்த தொழில்நுட்ப ஜாம்பவான் Google உடன் ஆழமான கூட்டாண்மையைக் கொண்டுள்ளது. Samsung போன்களில் பல AI அம்சங்களுக்கும், இயல்புநிலை தேடுபொறியாகவும் Google உள்ளது. இருப்பினும், Samsung நிறுவனம் Perplexity உடன் நல்லுறவைப் பேணி வருகிறது. கடந்த ஆண்டு, Samsung-ன் முதலீட்டுப் பிரிவான NEXT, Perplexity AI ஸ்டார்ட்அப்பில் முதலீடு செய்ததும் குறிப்பிடத்தக்கது. தற்போது முதலீட்டாளர்களுடன் புதிய நிதி திரட்டும் முயற்சியில் Perplexity ஈடுபட்டுள்ள நிலையில், Samsung மேலும் ஒரு முதலீட்டைச் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.