பட்டா மாற்றம்: இறந்தவர்களின் பெயர்களை நீக்கி, வாரிசுகள் பெயர் சேர்க்க புதிய வழிமுறை...

Published : Jul 19, 2025, 11:14 PM IST

பட்டாவில் இறந்தவர்களின் பெயரை நீக்கி வாரிசுகள் பெயரை சேர்க்கும் எளிய வழிமுறை. இ-சேவை அல்லது Citizen Portal மூலம் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள். 

PREV
16
பட்டா மாற்றம் இனி எளிது: வாரிசுகளுக்கான ஓர் வரப்பிரசாதம்!

தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புற நிலங்களின் நில அளவை ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டு, [https://eservices.tn.gov.in/](https://eservices.tn.gov.in/) என்ற இணையதளம் மூலம் பொதுமக்கள் எளிதாக பார்வையிடவும், அச்சிட்டு பயன்படுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

26
இறந்த பட்டாதாரர்களின் பெயர்கள்

இருப்பினும், பல சிட்டா ஆவணங்களில் இறந்த பட்டாதாரர்களின் பெயர்கள் நீக்கப்படாமலும், அவர்களின் வாரிசுதாரர்கள் அல்லது தற்போதைய உரிமையாளர்களின் பெயர்கள் சேர்க்கப்படாமலும் உள்ளன.

36
நில உடைமைதாரர்

இந்தப் பிரச்சனைக்குத் தீர்வுகாணும் வகையில், இறந்த நில உடைமைதாரர்களின் பெயர்களை நீக்கி, அவர்களின் வாரிசுதாரர்கள் அல்லது பதிவு செய்யப்பட்ட ஆவணம் வாயிலாக உரிமை பெற்றவர்களின் பெயர்களைச் சேர்க்க இ-சேவை மையங்கள் அல்லது Citizen Portal வாயிலாக விண்ணப்பிக்கலாம் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா.சுகுமார், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

46
விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேவையான ஆவணங்கள்

பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் இ-சேவை மையங்கள் அல்லது Citizen Portal வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் நபரின் தன்மையைப் பொறுத்து தேவையான ஆவணங்கள் மாறுபடும்.

56
வாரிசுதாரர்கள் விண்ணப்பிக்கும் நேர்வில்:

இறப்பு சான்றிதழ்

வாரிசு சான்றிதழ்

மேற்கண்ட வாரிசுகளில் எவரேனும் இறந்திருப்பின், அவர்களது இறப்பு சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ்

பட்டா மாறுதல் கோரும் புலம் தொடர்பான வில்லங்க சான்றிதழ்

பதிவு செய்யப்பட்ட பாகப்பிரிவினை / தான செட்டில்மெண்ட் / உயில் சாசன ஆவண நகல்

நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பட்டா மாறுதல் கோரப்பட்டால், உரிமையியல் நீதிமன்ற தீர்ப்பு நகல்

66
கிரையம் பெற்றவர் விண்ணப்பிக்கும் நேர்வில்:

இறப்பு சான்றிதழ்

வாரிசு சான்றிதழ்

மேற்கண்ட வாரிசுகளில் எவரேனும் இறந்திருப்பின், அவர்களது இறப்பு சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ்

பட்டா மாறுதல் கோரும் புலம் தொடர்பான வில்லங்க சான்றிதழ்

பதிவு செய்யப்பட்ட கிரைய ஆவண நகல்

இந்த எளிமைப்படுத்தப்பட்ட புதிய நடைமுறை, நில உரிமையாளர்களுக்கு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories