ஒன்ப்ளஸ் தனது அடுத்த ப்ரீமியம் மாடலான OnePlus 15-ஐ நவம்பர் 13 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது. இது இந்தியாவின் முதல் Snapdragon 8 Elite Gen 5 சிப்செட், 7,300mAh பேட்டரி மற்றும் அதிவேக சார்ஜிங் உடன் வருகிறது.
பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன்ப்ளஸ் (OnePlus) தனது அடுத்தது தலைமுறை ப்ரீமியம் மாடலான OnePlus 15-ஐ இந்தியாவில் நவம்பர் 13 மாலை 7 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்த உள்ளது. இந்த மொபைல் இந்தியாவில் முதன்முறையாக Qualcomm Snapdragon 8 Elite Gen 5 சிப்செட்டுடன் வருவது சிறப்பம்சமாகும். இந்த சக்திவாய்ந்த சிப், கேமிங் மற்றும் மல்டிடாஸ்கிங் செயல்திறனில் மிகப்பெரிய முன்னேற்றத்தை வழங்கும் நிறுவனம் கூறியுள்ளது.
24
பெரிய பேட்டரி மற்றும் அதிவேக செயல்திறன்
OnePlus 15 மாடலில் மிகப்பெரிய 7,300mAh பேட்டரி இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு, ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் மூலம் சில நிமிடங்களில் முழு சார்ஜ் பெறும் திறன் இருக்கும். புதிய சிப்செட்டுடன் இணைந்த AI செயல்திறன், கிராபிக்ஸ் மற்றும் பவர் மேனேஜ்மெண்ட் அம்சங்கள் கேமிங் ரசிகர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
34
விலை மற்றும் ஸ்டோரேஜ் விவரங்கள்
தற்போது லீக்கான தகவல்களின் படி, OnePlus 15 இன் அடிப்படை மாடல் 12GB RAM + 256GB ஸ்டோரேஜுடன் ரூ.72,999 எனவும், மேல்நிலை மாடல் 16GB ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜுடன் ரூ.76,999 எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கலாம். மேலும், அறிமுக சலுகையாக ரூ.2,699 மதிப்புள்ள OnePlus Nord இயர்பட்ஸ் இலவசமாக வழங்கப்படும் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
OnePlus 15 இந்திய அறிமுக நிகழ்ச்சி நவம்பர் 13 அன்று மாலை 7 மணிக்கு OnePlus அதிகாரப்பூர்வ YouTube சேனல் மற்றும் சமூக ஊடகங்களில் நேரலை செய்யப்படும். அதன் பிறகு, ஒரு Early Access Sale நடத்தப்படும், இதில் ரசிகர்கள் மொபைலை முன்கூட்டியே வாங்கும் வாய்ப்பு பெறுவார். அதன்பின், Amazon, OnePlus ஆன்லைன் ஸ்டோர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ரீட்டெய்ல் கடைகள் வழியாக விற்பனை தொடங்கும். OnePlus 15 இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் “பெர்பார்மன்ஸ் மான்ஸ்டர்” என ரசிகர்கள் ஏற்கனவே எதிர்பார்த்து வருகின்றனர்.