பழைய ஸ்மார்ட்போன் உங்கள் வீட்டில் வெறுமனே கிடக்கிறதா? அதை சரியாக பயன்படுத்தினால் வீட்டில் பாதுகாப்பு, குழந்தைகள் பொழுதுபோக்கு, கற்றல் மற்றும் மீடியா பயன்பாடுகள் போன்ற பல நன்மைகள் கிடைக்கும்.
புதிய மொபைலை நாம் வாங்கிவிட்டால், நமது பழைய ஸ்மார்ட்போனை வீட்டில் எங்கயாவது ஓரமாக போட்டுவிடுவோம். பழைய மொபைலை சரியாக பயன்படுத்தினால், அது நம்முடைய வாழ்வில் பல நன்மைகள் தரும். பழைய மொபைலை மீண்டும் பயன்படுத்தி உங்கள் வீட்டில் பாதுகாப்பு, குழந்தைகள் பொழுதுபோக்கு, கற்றல் மற்றும் மீடியா போன்ற பயன்பாட்டை கொண்டு வரலாம்.
24
பாதுகாப்பு கேமராவாக மாற்றவும்
Alfred, Manything போன்ற செயலிகளை பயன்படுத்தி பழைய மொபைலை வீட்டிற்கோ அல்லது அலுவலகத்திற்கோ சிசிடிவி கேமராவாக மாற்றலாம். இணையத்துடன் இணைத்து 24x7 கண்காணிப்பு செய்யலாம். இது புதிய கேமரா வாங்காமல் பாதுகாப்பை மேம்படுத்தும்.
34
குழந்தைகள் மற்றும் வீட்டு பொழுதுபோக்கு
பழைய மொபைலை Wi-Fi மூலம் YouTube Kids, கல்வி செயலிகள் அல்லது விளையாட்டு சாதனமாக மாற்றலாம். இது குழந்தைகளுக்கு புதிய மொபைல் கொடுக்க வேண்டிய கவலையை நீக்கும்.
பழைய மொபைலை ஸ்மார்ட் ஹோம் கட்டுப்பாட்டிற்கோ, புளூடூத் மூலம் மியூசிக், கானா, ஸ்பாடிஃபை, ஜியோசாவ்ன் போன்ற செயலிகளை இயக்கும் மீடியா சாதனமாகவும் பயன்படுத்தலாம். பயணத்திலும் Wi-Fi ஹாட்ஸ்பாட் அல்லது இரண்டாம் சாதனமாகவும் பயன்படும். மேற்கண்டவாறு உங்கள் வீட்டில் உள்ள பழைய மொபைலை பயன்படுத்தி பணத்தை சேமிக்கவும், பழைய பொருளை உபயோகமாகவும் மாற்றலாம்.