நத்திங் ரசிகர்களே தயாரா? வெளியானது 4a சீரிஸ் ரகசியம்.. விலையை கேட்டா ஷாக் ஆவீங்க!

Published : Dec 13, 2025, 07:57 PM IST

Nothing Phone 4a நத்திங் போன் 4a மற்றும் 4a ப்ரோ விவரங்கள் கசிந்தன. ஸ்னாப்டிராகன் சிப்செட், 12GB ரேம் மற்றும் 50MP கேமராவுடன் வெளியாகும் எனத் தகவல்.

PREV
16
Nothing Phone 4a டிரான்ஸ்பரன்ட் டிசைன் மூலம் கலக்கும் நத்திங்! அடுத்த ஆண்டு வெளியாகும் 'Phone 4a' சீரிஸ் - முழு விவரம்!

வித்தியாசமான டிசைன் மற்றும் லைட்டிங் செட்டப் மூலம் இளைஞர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளது நத்திங் (Nothing) நிறுவனம். சமீபத்தில்தான் 'நத்திங் போன் 3a கம்யூனிட்டி எடிஷன்' (Community Edition) இந்தியச் சந்தையில் அறிமுகமானது. இந்நிலையில், அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள அந்நிறுவனத்தின் அடுத்த தலைமுறை போன்களான 'நத்திங் போன் 4a' (Phone 4a) மற்றும் 'நத்திங் போன் 4a ப்ரோ' (Phone 4a Pro) குறித்த முக்கியத் தகவல்கள் தற்போது இணையத்தில் கசிந்துள்ளன.

26
இணையத்தில் கசிந்த ரகசியத் தகவல்கள்

டெலிகிராம் (Telegram) தளம் வாயிலாக டிப்ஸ்டர் ஒருவர் வெளியிட்டுள்ள தகவலின்படி, வரவிருக்கும் இந்த இரண்டு புதிய நத்திங் போன்களும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 சீரிஸ் (Qualcomm Snapdragon 7 series) சிப்செட் மூலம் இயங்கும் என்று தெரிகிறது. மேலும், எதிர்காலத் தொழில்நுட்பமான இ-சிம் (eSIM) ஆதரவையும் இந்த போன்கள் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, 12GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் வேரியண்ட்களிலும் இவை விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது.

36
நான்கு வண்ணங்கள்.. விலை என்ன?

வடிவமைப்பைப் போலவே வண்ணங்களிலும் நத்திங் கவனம் செலுத்தி வருகிறது. அதன்படி, இந்த புதிய போன்கள் நீலம் (Blue), பிங்க் (Pink), வெள்ளை (White) மற்றும் கருப்பு (Black) ஆகிய நான்கு வண்ணங்களில் வெளியாகலாம். விலையைப் பொறுத்தவரை, நத்திங் போன் 4a மாடல் சுமார் 475 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.43,000) என்றும், நத்திங் போன் 4a ப்ரோ மாடல் சுமார் 540 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.49,000) என்றும் நிர்ணயிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

46
கேமராவில் செய்யப்பட்டுள்ள மெகா அப்டேட்

இந்த ஆண்டு வெளியான நத்திங் போன் 3a சீரிஸைப் போலவே, வரவிருக்கும் 4a மாடல்களும் சிறந்த கேமரா அம்சங்களைக் கொண்டிருக்கும். குறிப்பாக, AMOLED டிஸ்பிளே மற்றும் நீண்ட நேரம் உழைக்கக்கூடிய பெரிய பேட்டரி ஆகியவை இதில் இடம்பெறும்.

முந்தைய மாடலான நத்திங் போன் 3a ப்ரோ, 50MP + 50MP + 8MP என்ற ட்ரிபிள் கேமரா செட்டப்புடன் வெளியானது. அதேபோன்ற சக்திவாய்ந்த கேமரா அமைப்பை வரவிருக்கும் 'போன் 4a ப்ரோ' மாடலிலும் எதிர்பார்க்கலாம். செல்ஃபி பிரியர்களுக்காக 50MP முன்பக்க கேமராவும் இதில் இடம்பெறலாம்.

56
சாஃப்ட்வேர் மற்றும் பேட்டரி

மென்பொருளைப் பொறுத்தவரை, கூகுளின் அடுத்த வெளியீடான ஆண்ட்ராய்டு 16-ஐ அடிப்படையாகக் கொண்ட நத்திங் ஓஎஸ் 3.5 (Nothing OS 3.5) இயங்குதளத்தில் இந்த போன்கள் செயல்படும். பேட்டரி திறனைப் பொறுத்தவரை, 5,000mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இதில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

66
சாஃப்ட்வேர் மற்றும் பேட்டரி

நத்திங் நிறுவனம் தனது கம்யூனிட்டி எடிஷன் மூலம் வாடிக்கையாளர்களின் கருத்துக்களைக் கேட்டுத் தயாரிப்புகளை வடிவமைத்து வரும் நிலையில், இந்த புதிய 4a சீரிஸ் மீதான எதிர்பார்ப்பு இப்போதே எகிறத் தொடங்கியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories