ஒவ்வொரு ஆண்களும் ஹுரோ போல ஸ்டைலாக மாறலாம்! கூகுள் ஜெமினியில் இப்போது புது ட்ரெண்ட்... அதிரடி ப்ராம்ப்ட்ஸ்

Published : Sep 16, 2025, 11:07 AM IST

Nano Banana: கூகுள் ஜெமினியின் புதிய AI கருவியைப் பயன்படுத்தி அற்புதமான புகைப்படங்களை உருவாக்குவது எப்படி? ஆண்களுக்கான ரெட்ரோ, சினிமா, சைபர்பங்க் தோற்றங்களுக்கான சிறந்த ப்ராம்ப்ட்களை இங்கே காணலாம்.

PREV
16
புதிய தலைமுறை தொழில்நுட்பம் இளைஞர்களின் கையில்

கூகுள் ஜெமினியின் புதிய அம்சமான 'நானோ பனானா AI' இப்போது இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த கருவி மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக, ரெட்டோ புடவை தோற்றங்களில் பெண்கள் தங்கள் புகைப்படங்களை உருவாக்கிப் பதிவிடுகின்றனர். பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற தளங்களில் இந்த ரெட்டோ-ஸ்டைல் படங்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன. இந்த அம்சத்தை நீங்களும் பயன்படுத்தி, உங்களுக்குப் பிடித்த தோற்றத்தை உருவாக்கலாம்.

26
ஒரு நொடியில் அசத்தல் புகைப்படங்கள்

கூகுள் ஜெமினி 2.5 ஃப்ளாஷ் இமேஜில் சேர்க்கப்பட்ட இந்த நானோ பனானா அம்சம், இதுவரை 10 மில்லியனுக்கும் அதிகமானோரால் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த கூகுள் AI கருவி முற்றிலும் இலவசமானது. கூகுள் அறிக்கையின்படி, இந்த கருவி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து 200 மில்லியனுக்கும் அதிகமான புகைப்படங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.

36
ஆண்களுக்கான ட்ரெண்டிங் ப்ராம்ப்ட்கள்

பொதுவாக, பெண்கள் ரெட்டோ புடவை தோற்றங்களை உருவாக்க நிறைய ப்ராம்ப்ட்கள் இணையத்தில் கிடைக்கின்றன. ஆனால், ஆண்களுக்காகவே உருவாக்கப்பட்ட, தனித்துவமான சில ப்ராம்ப்ட்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ப்ராம்ப்ட்களைப் பயன்படுத்தி நீங்களும் சினிமா, ஸ்டுடியோ, சைபர்பங்க் போன்ற அசத்தலான தோற்றங்களை உருவாக்கிக் கொள்ளலாம்.

46
சினிமாட்டிக் தோற்றம்

உங்கள் புகைப்படத்தை சினிமா பாணியிலான படமாக மாற்ற, இந்த ப்ராம்ப்டைப் பயன்படுத்தலாம்:

"Convert the uploaded image of the man into a cinematic image. The person's face should remain exactly as it appears in the original image. The pose and clothing should be reimagined to fit the new setting of a serene, snowy mountain landscape at dusk. The image should feature soft and moody lighting with deep shadows and subtle highlights, and the overall mood should be calm and introspective."

இந்த ப்ராம்ப்ட் உங்கள் புகைப்படத்தை மாலை நேரத்தில் அமைதியான பனி மலையின் பின்னணியில், மென்மையான ஒளியுடன் சினிமா பாணியில் மாற்றும்.

56
ஹைப்பர்-ரியலிஸ்டிக் ஸ்டுடியோ புகைப்படம்

உங்கள் புகைப்படத்தை ஹைப்பர்-ரியலிஸ்டிக் ஸ்டுடியோ படமாக மாற்ற இந்த ப்ராம்ப்டைப் பயன்படுத்தலாம்:

"Convert the uploaded image of the man into a hyper-realistic studio image. The person's face should remain exactly as it appears in the original image. The pose and clothing should be reimagined to fit the new setting of an mnc office. The image should feature a grainy, slightly desaturated film look with soft, natural light and the overall mood should be sophisticated and intimate."

இந்த ப்ராம்ப்ட் உங்கள் புகைப்படத்தை பன்னாட்டு நிறுவனத்தின் அலுவலகச் சூழலில், மென்மையான ஒளியுடன் நுட்பமான தோற்றத்தில் மாற்றும்.

66
சைபர்பங்க் தோற்றம்

உங்களின் புகைப்படத்திற்கு ஒரு எதிர்கால பாணியிலான சைபர்பங்க் தோற்றத்தை உருவாக்க இந்த ப்ராம்ப்டைப் பயன்படுத்தலாம்:

"Convert the uploaded image of the man into a cyberpunk image. The person's face should remain exactly as it appears in the original image. The pose and clothing should be reimagined to fit the new setting of a bustling futuristic street market with vibrant, holographic advertisements. The image should feature bold, neon-lit colors and sharp contrasts, and the overall mood should be cyberpunk and energetic."

இந்த ப்ராம்ப்ட் உங்கள் புகைப்படத்தை நியான் விளக்குகள் கொண்ட எதிர்கால தெருவில், வண்ணமயமான விளம்பரங்களுடன் சைபர்பங்க் தோற்றத்தில் மாற்றும்.

Read more Photos on
click me!

Recommended Stories