ஹெவி கேமிங் செய்யும் பயனர்கள், மல்டிடாஸ்கிங், அரசு தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் என எல்லாருக்கும் மிகவும் பொருத்தமான ஒரு பட்ஜெட் போன் இந்தியாவுக்கு வரப்போகிறது. மோட்டோரோலா, தனது புதிய Moto G57 Power யை நவம்பர் 24ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது. பெயருக்கு ஏற்றபடி பேட்டரி, கேமரா, செயலி எல்லாம் “பவர் பேக்” ஆக இருக்கும்.
இரண்டு நாள்
இந்த மொபைலின் மிகப்பெரிய ஹைலைட் இதன் 7000mAh பேட்டரி தான். இதை சார்ஜ் பண்ண மறந்தாலும் இரண்டு நாளைக்கு போதும். அதோடு 30W வேகமாக சார்ஜிங் ஆதரவு கொடுத்திருப்பதால் பெரிய பேட்டரி இருந்தாலும் வேகமாக சார்ஜ் ஆகும். கேமிங், யூடியூப், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எதையும் பேட்டரி குறையாமல் நீண்ட மணிநேரம் பயன்படுத்தலாம்.