Jio True 5G gift voucher
ஜியோவில் வரம்பற்ற 5ஜி டேட்டாவை அனுபவிக்க, குறைந்தபட்சம் 2 ஜிபி 4ஜி பிளான் தேவை. இதன் விலை மாதம் ரூ.349. இந்நிலையில், ஜியோ வருடாந்திர 5G டேட்டா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது 12 மாதங்களுக்கு வரம்பற்ற 5G டேட்டாவை வழங்குகிறது. மேலும் ஒருவர் இந்த வவுச்சரை நண்பர் அல்லது குடும்ப உறுப்பினருக்கும் பரிசளிக்கலாம்.
Jio 5G gift voucher
ரூ.601 விலையில், ஜியோ Jio True 5G என்ற 12 5G அப்கிரேடு கிஃப்ட் வவுச்சர்களை வழங்குகிறது. இதை My Jio ஆப் மூலம் ரிடீம் செய்யலாம். இருப்பினும், இந்த 5G டேட்டா வவுச்சரைச் பயன்படுத்த வேண்டும் என்றால், ஏற்கெனவே குறைந்தபட்சம் 1.5 GB 4G டேட்டாவுக்கு மாதாந்திர அல்லது காலாண்டு பிளானில் ரீசார்ஜ் செய்திருக்க வேண்டும்.
Jio 5G Data voucher
ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டா திட்டத்தில் இருப்பவர்களுக்கும் ஜியோவின் ரூ.1,899 க்கான வருடாந்திர ரீசார்ஜ் திட்டத்தில் உள்ளவர்களுக்கும் இந்த வவுச்சர் வேலை செய்யாது.
Jio gift voucher
பயனர்கள் Jio True 5G கிஃப்ட் வவுச்சரை தங்களுக்காகவும் வாங்கலாம் அல்லது மை ஜியோ ஆப் மூலம் வேறு யாருக்காவது பரிசளிக்கவும் செய்யலாம். இந்தத் திட்டத்தை வேறொருவருக்குப் பரிசளிப்பதற்கு முன், அவர்கள் இந்த வவுச்சரைப் பயன்படுத்தி அதிகப் பலன்களைப் பெற தகுதியான பேசிக் பிளானில் இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
Jio True 5G unlimited data gift voucher
ஜியோவின் அன்லிமிடெட் 5G டேட்டா வவுச்சர் ரூ.199, ரூ.239, ரூ.299, ரூ.319, ரூ.329, ரூ.579, ரூ.666, ரூ.769 மற்றும் ரூ.899 ஆகிய ரீசார்ஜ் திட்டங்களில் உள்ளவர்களுக்கு வேலை செய்யும். பயனர்களின் பேசிக் பிளானைப் பொறுத்து, 5G டேட்டா வவுச்சரின் வேலிடிட்டியும் இருக்கும். அதிகபட்சமாக 30 நாட்கள் செல்லுபடியாகும்.
Jio data gift
5G டேட்டா வவுச்சர் செயல்படுத்தப்பட்டதும், பயனர்கள் 3 GB தினசரி 4G டேட்டாவுடன், அன்லிமிடெட் 5G டேட்டாவையும் பெறுவார்கள். இது தவிர, ஜியோ ரூ.51 (வேலிடிட்டி ஒரு மாதம்), ரூ.101 (வேலிடிட்டி 2 மாதம்) மற்றும் ரூ.151 (வேலிடிட்டி 3 மாதம்)விலையில் 5G வவுச்சர் திட்டங்களையும் வழங்குகிறது.