Recharge Alert: 2 ஜிபி டேட்டாவுடன் 20 ஜிபி இலவசம்.. ஜியோ வாடிக்கையாளர்களுக்கு சர்ப்ரைஸ்

Published : Jun 09, 2026, 09:49 PM IST

Recharge Alert: ஜியோ பயனர்கள் அடுத்த ரீசார்ஜ் செய்வதற்கு முன் இந்த திட்டங்களை கவனிக்க வேண்டும். இந்த ஆஃபர்கள், அதிக டேட்டா பயன்படுத்துபவர்களுக்கு பெரிய சேமிப்பை தரக்கூடும்.

PREV
15
அதிக டேட்டா பயன்படுத்துபவர்களுக்கு குட் நியூஸ்

ரிலையன்ஸ் ஜியோ தனது சில பிரபலமான ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதல் டேட்டா சலுகைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக, தினமும் 2 ஜிபி டேட்டா பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 20 ஜிபி வரை போனஸ் டேட்டா வழங்கப்படும் இரண்டு திட்டங்கள் தற்போது கவனத்தை ஈர்த்துள்ளன.

25
ரூ.749 திட்டம் என்ன வழங்குகிறது?

ரூ.749 திட்டம் 72 நாட்கள் செல்லுபடியாகும். இதில் தினமும் 2 ஜிபி அதிவேக டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இதனுடன், 20 ஜிபி கூடுதல் டேட்டாவும் இலவசமாகக் கிடைக்கிறது. அதிகமாக இணையத்தை பயன்படுத்தும் பயனர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

35
ரூ.899 திட்டத்தின் சிறப்பம்சங்கள்

90 நாட்கள் செல்லுபடியாகும் ரூ.899 திட்டமும் தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் காலிங் மற்றும் 100 எஸ்எம்எஸ் வசதிகள் வழங்கப்படுகின்றன. கூடுதலாக 20 GB போனஸ் டேட்டாவும் இதில் இடம்பெற்றுள்ளது. நீண்டகாலமாக செல்லுபடியாகும் திட்டத்தை விரும்புபவர்களுக்கு இது ஒரு மாற்றமாக இருக்கலாம்.

45
கூடுதல் சலுகைகள் என்ன?

இரண்டு திட்டங்களிலும் அன்லிமிடெட் 5ஜி பயன்பாடு, குறிப்பிட்ட காலத்திற்கு ஜியோ ஹாட்ஸ்டார், கூகுள் ஜெமினி ப்ரோ சந்தா, ஜியோ கிளவுட் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு கூடுதல் நன்மைகள் வழங்கப்படுகின்றன. இந்த அம்சங்களின் திட்டங்களின் மதிப்பை மேலும் உயர்த்துகின்றன.

55
எந்த திட்டம் உங்களுக்கு பொருத்தம்?

72 நாட்கள் அல்லது 90 நாட்கள் செல்லுபடியாகும் திட்டம் எது உங்கள் தேவைக்கு ஏற்றது என்பதை கருத்தில் கொண்டு தேர்வு செய்வது நல்லது. அதிக டேட்டா பயன்பாடு மற்றும் கூடுதல் டிஜிட்டல் சேவைகளை விரும்பும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டங்கள் கவனிக்கத்தக்கதாக இருக்கலாம்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories