Jio OTT Plans: ஜியோ யூசர்களுக்கு குட் நியூஸ்.. ரூ.550-க்கு 15+ ஓடிடி ஆப்ஸ், அன்லிமிடெட் 5G!

Published : Aug 08, 2026, 04:42 PM IST

Jio OTT Plans: ஜியோ பயனர்களுக்கு ஓடிடி மற்றும் டேட்டா சலுகைகளில் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. புதிய திட்டங்களில் ஒன்று ரூ.550-க்கு 84 நாட்கள், மற்றொன்று ரூ.2,000-க்கு 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது.

PREV
15
ஜியோ ஓடிடி திட்டங்கள்

ஜியோ ஏற்கனவே ரூ.200-க்கு 28 நாட்கள் வேலிடிட்டியுடன் 30GB டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5G கொண்ட ஓடிடி பாஸை வழங்குகிறது. இப்போது புதிதாக ரூ.550-க்கு 84 நாட்கள் வேலிடிட்டியுடன் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 90GB டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5G கிடைக்கும். இதேபோல், ரூ.2000 திட்டத்தில் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் 365GB டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5Gயும் உண்டு. ஆக்டிவ் பேஸ் பிளான் வைத்திருக்கும் ஜியோ பயனர்கள் இந்த பேக்குகளை ரீசார்ஜ் செய்யலாம்.

25
ஜியோ ரூ.2000 திட்டம்

ஒவ்வொரு ஜியோ ஓடிடி பாஸ் மூலமும் மாதம் சுமார் ரூ.1,500 மதிப்புள்ள பொழுதுபோக்கு நன்மைகள் கிடைப்பதாக ஜியோ நிறுவனம் கூறுகிறது. இந்த பேக்குகள் மூலம் 15 பிரீமியம் ஓடிடி ஆப்களையும், ஜியோ டிவி வழியாக 1000-க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்களையும் பார்க்கலாம். திரைப்படங்கள், வெப் சீரிஸ், விளையாட்டு, குழந்தைகள் நிகழ்ச்சிகள் என எல்லாவற்றையும் ஒரே பேக்கில் அனுபவிக்கலாம்.

ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஷாக்! ரூ.299 ரீசார்ஜ் பிளான் திடீர் நீக்கம்

35
ஜியோ ரூ.550 திட்டம்

இந்த ஓடிடி பாஸ்களில் YouTube பிரீமியம் சந்தாவும் அடங்கும். இதனால் விளம்பரங்கள் இல்லாமல் வீடியோக்களை பார்க்கலாம். மேலும், ஜியோஹாட்ஸ்டார் மொபைல் + ஹாலிவுட் சந்தா மூலம் லைவ் ஸ்போர்ட்ஸ், ஹாட்ஸ்டார் ஒரிஜினல்ஸ் மற்றும் ஹாலிவுட் படங்களை பார்க்கலாம்.

45
ஜியோ 84 நாட்கள் திட்டம்

ரூ.550 மற்றும் ரூ.2000 திட்டங்களில் அமேசான் பிரைம் லைட் சந்தாவும், ரூ.200 திட்டத்தில் பிரைம் வீடியோ மொபைல் எடிஷனும் கிடைக்கும். இவற்றுடன் Sony LIV, ZEE5, Lionsgate Play, Discovery+, Sun NXT, FanCode, Hoichoi, Chaupal, Planet Marathi, Kanccha Lannka, TimesPlay, Tarang Plus போன்ற ஆப்களையும் ஜியோ டிவி மூலம் பயன்படுத்தலாம்.

55
ஜியோ 365 நாட்கள் திட்டம்

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.550 மற்றும் ரூ.2000 ஜியோ ஓடிடி பாஸ் திட்டங்களை MyJio ஆப், அதிகாரப்பூர்வ ஜியோ இணையதளம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஜியோ ரீடெய்ல் கடைகள் மூலம் ரீசார்ஜ் செய்துகொள்ளலாம். ஒரே ரீசார்ஜில் டேட்டா மற்றும் பல பிரீமியம் ஓடிடி சேவைகளை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இந்த புதிய திட்டங்கள் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories