Jio 175 OTT plan
இது ஜியோவின் மலிவு விலை டேட்டா பேக். இதன் வேலிடிட்டி 28 நாட்கள். இதில், இன்டர்நெட் பயன்பாட்டிற்கு 10GB டேட்டா கிடைக்கும். இத்துடன் Sony Liv, Zee5, Jio Cinema உட்பட மொத்தம் 10 OTT செயலிகளுக்கான சந்தா முற்றிலும் இலவசமாகப் பெறலாம்.
Jio 448 OTT plan
28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த பிளான் 448 ரூபாய் விலையில் கிடைக்கும். இந்த திட்டத்தில் தினமும் 2GB டேட்டா தரப்படுகிறது. இந்த திட்டம் அன்லிமிட்டட் வாய்ஸ் கால்களையும் கொடுக்கிறது. இதில், Sony Liv மற்றும் Zee5 உட்பட 12 OTT தளங்களை இலவசமாகப் பெறலாம்.
Jio 949 OTT plan
ஜியோவின் 949 திட்டத்தின் வேலிடிட்டி காலம் 84 நாட்கள். இதில் தினமும் 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைல் சப்ஸ்கிரிப்ஷன் மூன்று மாதங்களுக்கு இலவசமாகக் கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் அன்லிமிட்டட் வாய்ஸ் கால்களும் பேசலாம்.
Jio 1029 OTT plan
ஜியோவின் இந்தத் திட்டத்தில், 84 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் 2 GB அதிவேக டேட்டா மூலம் இன்டர்நெட்டைப் பயன்படுத்தலாம். வரம்பற்ற போன் கால்களும் வழங்கப்படுகிறது. அமேசான் ப்ரைம் லைட் மற்றும் ஜியோ சினிமாவிற்கான இலவச சந்தா தான் இந்த திட்டத்தின் சிறப்பு அம்சம்.