நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் தங்களின் மலிவு ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டங்களில் பெரிய மாற்றங்களை செய்துள்ளன. பல மாதங்களாக, ரூ.249 திட்டம் ஏர்டெல் பயனர்கள் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஒன்றாக இருந்தது. ஆனால் திடீரென, அந்த திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் நடுத்தர வர்க்க பயனர்களுக்கு கூடுதல் செலவினச் சுமை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
25
ஏர்டெல் ரூ.299 திட்டத்தில் மாற்றம்
முன்பு ஏர்டெல் ரூ.299 திட்டத்தில் தினமும் 1.5ஜிபி டேட்டா வழங்கப்பட்டது. ஆனால் இப்போது, அது 1GB டேட்டா மட்டுமே வழங்கப்படுகிறது. அதாவது, மொத்தம் 42GB-இல் இருந்து 28GB ஆகக் குறைந்துள்ளது. இதனால், பயனர்கள் மாதத்திற்கு 14GB குறைவாக டேட்டா பெற வேண்டியிருக்கும். இந்த திட்டத்தில் 28 நாட்கள் செல்லுபடியாக, வரம்பற்ற குரல் அழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் இலவச ஹாலோ டியூன்கள் வழங்கப்படுகின்றன.
35
ரூ.249 திட்டம் நிறுத்தம்
பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படும் ரூ.249 திட்டம் ஏர்டெல் மூலம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் தினமும் 1.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்புகள் மற்றும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. செல்லுபடி காலம் 24 நாட்கள் என்பதால், குறைந்த செலவில் அதிக வசதிகளை வழங்கியதால், பல கோடி பயனர்கள் இந்த திட்டத்தை விரும்பினர். தற்போது அது நிறுத்தப்பட்டிருப்பது, வாடிக்கையாளர்களுக்கு உண்மையான அதிர்ச்சி செய்தியாக அமைந்துள்ளது.
ஏர்டெல் மட்டும் அல்ல, ரிலையன்ஸ் ஜியோவும் தங்களது மாற்று திட்டங்களில் மாற்றங்களைச் செய்துள்ளன. குறிப்பாக, தினசரி அதிக டேட்டா அளவை வழங்கிய திட்டங்களில் சுருக்கம் செய்யப்பட்டுள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம், பயனர்களுக்கு கூடுதல் டேட்டா தேவைப்பட்டால் அதிக விலை திட்டங்களைத் தேர்வு செய்ய வேண்டிய நிலை உருவாகிறது.
55
புதிய திட்டம் வருமா?
இப்போது பெரிய கேள்வி, ஏர்டெல் அல்லது ஜியோ புதிய மலிவு திட்டங்களை அறிவிக்குமா என்பது தான். இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வரவில்லை. இருப்பினும், பயனர்களை தக்கவைக்க விரைவில் புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்ற நம்பிக்கை வாடிக்கையாளர்களிடையே உள்ளது.