தினமும் 2 மணி நேரம் மட்டுமே ஸ்மார்ட்போன் பயன்படுத்தணும்! அதிரடியாக உத்தரவிட்ட அரசு! எங்க தெரியுமா?

Published : Aug 29, 2025, 08:55 AM IST

மக்கள் தினமும் 2 மணி நேரம் மட்டுமே ஸ்மார்ட்போன் பயன்படுத்த வேண்டும் என ஜப்பான் நகரம் அறிவித்துள்ளது.

PREV
14
Japan City Restricts Smartphone Use To 2 Hours Daily

இன்றைய காலக்கட்டத்தில் ஸ்மார்ட்போன்கள் உலகை ஆட்டிப்படைக்கின்றன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போன்களில் மூழ்கி கிடைக்கின்றனர். தகவல்தொடர்பு, பொழுதுபோக்கு, கல்வி, வேலை என அனைத்திற்கும் ஸ்மார்ட்போன்கள் அத்தியாவசியமாகிவிட்டன. ஆனால் ஸ்மார்ட்போன்களின் அதீத பயன்பாடு பல்வேறு சமூக மற்றும் தனிப்பட்ட பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.

24
தினமும் 2 மணி நேரம் மட்டுமே ஸ்மார்ட்போன்

மொபைலால் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் மனநலம், உடல்நலம் மற்றும் கல்வித்திறன் பாதிக்கப்படுவது பெரும் கவலையாக இருந்து வருகிறது. உலகில் வளர்ந்து வரும் நாடான ஜப்பானிலும் அனைவரும் செல்போனுக்கு அடிமையாக உள்ளனர். இதை கவனத்தில் கொண்ட ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் உள்ள யமகாட்டா மாகாணத்தில் உள்ள யோனேசாவா நகரம் மக்கள் தினமும் 2 மணி நேரம் மட்டுமே ஸ்மாட்போன் பயன்படுத்த வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

34
சட்டப்பூர்வமான தடை அல்ல‌

யோனேசாவா நகர மேயர் மசாஃபூமி கோகி மக்கள் தினமும் 2 மணி நேரம் மட்டுமே செல்போன் பயன்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார். இது சட்டபூர்வமான தடை அல்ல. இது ஒரு தன்னார்வ முயற்சி. இருப்பினும், இந்த வழிகாட்டுதலை நடைமுறைப்படுத்துவதற்கு உள்ளூர் சமூகம், பள்ளிகள் மற்றும் பெற்றோர்கள் இடையே வலுவான ஒத்துழைப்பு தேவை என்று யோனேசாவா நகரம் தெரிவித்துள்ளது. ஒரு நாளைக்கு இரண்டு மணிநேரம் மட்டுமே ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

44
ஸ்மார்ட்போனால் ஏற்படும் தீமைகள்

அதிக நேரம் ஸ்மார்ட்போனில் செலவழிப்பது, மன அழுத்தம், பதட்டம், மனச்சோர்வு மற்றும் சமூகத் தனிமைப்படுத்துதல் போன்ற மனநலப் பிரச்சனைகளுக்கு வழிவகுப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆன்லைன் கேம்கள், வீடியோக்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் குழந்தைகளை படிப்பில் கவனம் செலுத்த விடாமல் தடுக்கின்றன. நீண்ட நேரம் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தும்போது கண் சோர்வு, கழுத்து வலி, உடல் பருமன் மற்றும் தூக்கமின்மை போன்ற உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுவதாலும் ஜப்பான் நகரம் இந்த அதிரடி முடிவை கொண்டு வந்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories