இன்ஸ்டாகிராமின் 'எடிட்ஸ்' அறிமுகம்! அசத்தலான வீடியோ எடிட்டிங் இனி உங்கள் கையில்!

Published : Apr 24, 2025, 09:52 PM IST

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம், 'எடிட்ஸ்' என்ற புதிய இலவச வீடியோ எடிட்டிங் செயலியை iOS மற்றும் Android-ல் அறிமுகம் செய்துள்ளது. இதன் அம்சங்களை அறிந்து உடனே பதிவிறக்குங்கள்!  

PREV
15
இன்ஸ்டாகிராமின் 'எடிட்ஸ்' அறிமுகம்! அசத்தலான வீடியோ எடிட்டிங் இனி உங்கள் கையில்!

சமூக வலைத்தள உலகில் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கும் இன்ஸ்டாகிராம், தனது பயனர்களுக்கு மேலும் ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதுதான் 'எடிட்ஸ்' (Edits) எனப்படும் புதிய வீடியோ எடிட்டிங் செயலி! இந்த செயலி iOS மற்றும் Android பயனர்களுக்காக இலவசமாக வெளியிடப்பட்டுள்ளது.
 

25

இந்த புதிய செயலி குறித்து முன்னதாகவே ஜனவரி மாதம் அறிவிப்பு வெளியானது. தற்போது, இன்ஸ்டாகிராம் இதனை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. இன்ஸ்டாகிராமின் தலைவர் ஆடம் மொசெரி முன்னதாகவே தெரிவித்தபடி, இந்த வீடியோ எடிட்டிங் செயலி, உத்வேகம் அளிக்கும் பிரத்யேக டேப், ஆரம்ப கட்ட யோசனைகளை சேமிக்கும் வசதி மற்றும் உயர் தர கேமரா உள்ளிட்ட பல்வேறு படைப்பு கருவிகளை உள்ளடக்கியதாக இருக்கும்.
 

35

அதுமட்டுமின்றி, பயனர்கள் தங்களது நண்பர்கள் மற்றும் கிரியேட்டர்களுடன் எடிட் செய்த வீடியோவின் டிராஃப்ட்களைப் பகிரலாம். மேலும், எடிட்ஸ் மூலம் உருவாக்கப்பட்ட வீடியோக்கள் இன்ஸ்டாகிராமில் எப்படி செயல்படுகின்றன என்பதற்கான புள்ளிவிவரங்களையும் தெரிந்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

45

சமீபத்தில் அமெரிக்காவில் டிக்டாக் மற்றும் கேப்கட் செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்ஸ்டாகிராம் இந்த புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது கவனிக்கத்தக்கது. எதிர்காலத்தில், கீஃப்ரேம்கள், AI-ஆதரவு எடிட்டிங் கருவிகள் மற்றும் பிற பயனர்களுடன் இணைந்து வீடியோக்களை உருவாக்கும் வசதி போன்ற கூடுதல் அம்சங்களையும் 'எடிட்ஸ்' செயலி கொண்டிருக்கும் என்று இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது.
 

55

இந்த செயலி தற்போது உலகளவில் கிடைக்கிறது. பயனர்கள் இதனை பதிவிறக்கம் செய்து தங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கின் மூலம் உள்நுழையலாம். இனி உங்கள் வீடியோக்களை மேலும் அழகாக்கவும், தனித்துவமாக்கவும் 'எடிட்ஸ்' செயலி உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை! உடனே பதிவிறக்கி அசத்துங்கள்!


டீன் ஏஜ் இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு இவ்வளவு கட்டுபாடா? என்னனு தெரிந்துகொள்ளுங்கள்…

Read more Photos on
click me!

Recommended Stories