உலகமே இந்தியாவைத் திரும்பிப் பார்க்கும்! 2nm சிப் தயாரிப்பில் களமிறங்கும் இந்தியா - ரூ.1000 கோடி ஒதுக்கீடு!

Published : Feb 08, 2026, 06:30 AM IST

chip இந்தியா செமிகண்டக்டர் மிஷன் 2.0: சிப் டிசைனிங், ஸ்டார்ட்அப் மற்றும் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம். 2nm சிப் தயாரிப்பு இலக்குடன் ரூ.1000 கோடி ஒதுக்கீடு.

PREV
15
chip

இந்தியாவை எலக்ட்ரானிக்ஸ் மற்றும் சிப் உற்பத்தியில் உலகளாவிய மையமாக மாற்ற மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 'இந்தியா செமிகண்டக்டர் மிஷன் 2.0' (India Semiconductor Mission 2.0 - ISM 2.0) திட்டத்தை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் (Ashwini Vaishnaw) அறிவித்துள்ளார். இந்த இரண்டாம் கட்ட திட்டமானது சிப் வடிவமைப்பு (Chip Design), திறமையான பணியாளர்களை உருவாக்குதல் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஊக்குவித்தல் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

25
சிப் டிசைனிங் நிறுவனங்களுக்கு முதலிடம்

ISM 2.0 திட்டத்தின் முக்கிய நோக்கமே உள்நாட்டு சிப் டிசைனிங் நிறுவனங்களை ஊக்குவிப்பதுதான். "இந்தியாவில் இருந்தே அடுத்த குவால்காம் (Qualcomm) போன்ற பெரிய நிறுவனங்கள் உருவாக வேண்டும். அதற்காக ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்" என்று அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இதற்காக 2026-27 நிதியாண்டில் ரூ. 1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

35
2nm சிப் தயாரிப்பு இலக்கு

நீண்ட கால அடிப்படையில், மிகச்சிறிய மற்றும் அதிவேகமான 2-நானோமீட்டர் (2nm) சிப்களை இந்தியாவிலேயே தயாரிப்பதே இந்த மிஷனின் இலக்காகும். குவால்காம் நிறுவனம் இந்தியாவில் இணைந்து உருவாக்கிய 2nm சிப் அறிமுக விழாவில் பேசும்போது அமைச்சர் இந்தத் தகவலைப் பகிர்ந்துகொண்டார். இது இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்.

45
வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு

இந்தத் திட்டத்தின் மூன்றாவது முக்கிய தூண் 'திறன் மேம்பாடு' (Talent Development) ஆகும். செமிகண்டக்டர் துறையில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும், இளைஞர்களுக்குத் தேவையான பயிற்சிகளை வழங்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே இதற்கான வலுவான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் திறமையான பணியாளர்கள் அதிகளவில் உருவாக்கப்படுவார்கள் எனவும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

55
முழுமையான ஈக்கோசிஸ்டம் உருவாக்கம்

சிப் தயாரிப்பு மட்டுமின்றி, அதற்குத் தேவையான உபகரணங்கள், ரசாயனங்கள் மற்றும் கேஸ் சப்ளை செய்யும் நிறுவனங்களையும் இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ஒரு முழுமையான செமிகண்டக்டர் சூழல் (Ecosystem) இந்தியாவில் உருவாகும். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்தபடி, இந்த ISM 2.0 திட்டம் இந்தியாவின் தொழில்நுட்பக் கனவை நனவாக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories