பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக 4ஜி குறித்து முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை விரிவாக பார்க்கலாம்.
BSNL 4G Important update: மத்திய அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் மலிவு விலையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு போட்டியாக 4ஜி சேவையை முழுமையாக கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதன் 4G நெட்வொர்க்கை மேம்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் 1,00,000 புதிய 4G மொபைல் டவர்களை அமைக்க ஒரு லட்சிய இலக்கை நிர்ணயித்துள்ளது.
24
பிஎஸ்என்எல் 4G சேவை
பிஎஸ்என்எல் 4G சேவை இப்போது 75,000க்கும் மேற்பட்ட இடங்களில் செயல்பட்டு வருவதாக அந்நிறுவனம் சமூக ஊடகங்களில் அறிவித்துள்ளது. பிஎஸ்என்எல் மலிவு விலையில் திட்டங்களை வழங்கி வந்தாலும் இன்டர்நெட் ஸ்பீடு அதிகம் இல்லாததால் பலரும் அதில் இருந்து வெளியேறி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. 2024 டிசம்பருக்கான TRAI இன் சமீபத்திய அறிக்கையின்படி, BSNL சுமார் 3,22,000 வாடிக்கையாளர்களை இழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் மாத இறுதிக்குள், BSNL நிறுவனத்தில் சுமார் 91.7 மில்லியன் சந்தாதாரர்கள் இருந்தனர். பல வாடிக்கையாளர்கள் அடிக்கடி ஏற்படும் அழைப்பு துண்டிப்புகள் மற்றும் நெட்வொர்க் சிக்கல்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளனர். அரசு இந்தப் பிரச்சினைகளை அங்கீகரித்து, BSNL நிறுவனத்தின் நெட்வொர்க் நம்பகத்தன்மையை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் பயனர்களுக்கு வேகமான இணையம் மற்றும் சிறந்த சேவையை வழங்க நிறுவனம் அதன் உள்கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் செய்துள்ளது.
அதாவது மின் தடைகளின் போதும் சேவைகள் இயங்குவதை உறுதி செய்வதற்காக அவர்கள் 30,000 புதிய காப்பு பேட்டரிகளையும் நிறுவியுள்ளனர். மேலும் அவர்களின் நெட்வொர்க்கை ஆதரிக்க 15,000 க்கும் மேற்பட்ட மின் உற்பத்தி நிலையங்கள் இப்போது செயல்பாட்டில் உள்ளன. இந்த முயற்சிகள் இருந்தபோதிலும், வாடிக்கையாளர் தக்கவைப்பில் BSNL சவால்களை எதிர்கொள்கிறது. இது நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மட்டும் சுமார் 300,000 சந்தாதாரர்களை இழக்க வழிவகுத்தது.
44
பிஎஸ்என்எல் பிளான்கள்
நாடு முழுவதும் உள்ள அனைத்து முக்கிய நகரங்களிலும் கிராமங்களிலும் 4ஜி டவர்கள் நிறுவப்பட உள்ளன. இந்தியாவின் முக்கியமான 15 நகரங்களில் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை கொண்டு வர உள்ளதால் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் சுனில் மிட்டலின் ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் கடும் சவாலை எதிர்கொள்ள இருக்கின்றன. பிஎஸ்என்எல்லின் மேம்பட்ட டவர்கள் மூலம் ஹை ஸ்பீடு இன்டர்நெட் கிடைக்கும். 4ஜி சேவை முழுவமையாக வரும்போது ஏர்டெல், ஜியோவில் இருந்து ஏராளமான வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் பக்கம் சாய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.