தமிழிசைக்கு மீண்டும் கவர்னர் பதவி..? ஹெச்.ராஜாவுக்கும் அதிர்ஷடம்..! பாஜக அசத்தல் பளான்..!

Published : Aug 23, 2025, 09:54 AM IST

தமிழகத்தை சேர்ந்த 3 பேர் ஆளுநராக இருந்த நிலையில் தற்போது யாருமே ஆளுநராக இல்லை. இதனால், தமிழகத்தில் பா.ஜ.க,வுக்காக உழைத்தவர்களுக்கு கவர்னர் பதவி வழங்க, அக்கட்சியின் மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல்.

PREV
14

தேசிய அளவில் பாஜக ஆளும் கட்சியாக இருந்தபோதும், பல மாநிலங்களில் ஆட்சி அமைத்த போதும், தமிழ்நாட்டில் பாஜகவால் வலுவாக காலூன்ற முடியவில்லை. தமிழகத்தில் பாஜகவின் செல்வாக்கு ஒப்பீட்டளவில் மிகக் குறைவு. திராவிட கட்சிகளான திமுகவும், அதிமுகவும் அரசியல் களத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. ஆனாலும், அசராமல் பாஜக தமிழகத்தில் வலுவாகக் காலூன்ற முயற்சித்து வருகிறது

தமிழ்நாட்டில் பாஜகவுக்கு குறிப்பிடத்தக்க வாக்கு வங்கி இல்லை என்றாலும், 2014 மற்றும் 2024 தேர்தல்களில் அதன் வாக்கு வீதம் உயர்ந்து வருகிறது. 2019-ல் 3.6% ஆக இருந்த வாக்கு வீதம் 2024-ல் 11.4% ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் பாஜகவின் செல்வாக்கு படிப்படியாக வளர்ந்து வரும் அதேவேளை திராவிட கட்சிகளின் ஆதிக்கத்தை எதிர்கொள்ள இன்னும் வலுவான அடித்தளத்தை அமைக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

24

திராவிட இயக்கங்களின் ஆதிக்கம், பெரியாரின் மரபு காரணமாக, பாஜகவின் இந்துத்துவக் கொள்கைகள் பெரும்பாலான மக்களிடம் எடுபடவில்லை. இதற்காக தமிழகத்தை சேர்ந்த பாஜக மூத்த நிர்வாகிகளுக்கு ஆளுநர் பதவி, மத்திய அமைச்சரவையில் இடம் என தலைவர்களை அங்கீகரிக்கும் பாஜக, தமிழக பாஜக மாநிலத் தலைவராக 2014 முதல் 2019 வரை பதவி வகித்த தமிழிசைக்கு ஆளுநர் பொறுப்பு வழங்கி அங்கீகரித்தது. தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா ஆளுநர் (2019-2024), புதுச்சேரி துணைநிலை ஆளுநர் (2021-2024) எனப்பதவி வகித்தார். பின்னர் தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார்.

தமிழக பாஜக மாநிலத் தலைவராக 2000-ம் ஆண்டு பதவி வகித்த இல.கணேசன் மணிப்பூர் ஆளுநர் (2021-2023), மேற்கு வங்க ஆளுநர் (2022, கூடுதல் பொறுப்பு), மற்றும் நாகாலாந்து ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்தார். அவரும் உடல்நிலை காரணமாக சமீபத்தில் உயிரிழந்தார்.

34

தமிழக பாஜக மாநிலத் தலைவராக 2004-2007 வரை பதவி வகித்த சி.பி.ராதாகிருஷ்ணன், ஜார்க்கண்டு ஆளுநர் (2023 முதல்), மகாராஷ்டிரா ஆளுநராக 2024 முதல், கூடுதல் பொறுப்பு வகித்தார். கோயம்புத்தூரைச் சேர்ந்த தமிழக பாஜக சீனியரான அவர், தற்போது குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜக மாநில தலைவராக இருந்த எல்.முருகனுக்கு மாநிலங்களவை பதவி வழங்கி மத்திய அமைச்சர் பொறுப்பும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் இல.கணேசன் உடல்நிலை பாதிப்பு காரணமாக காலமாகியுள்ள நிலையில் நாகலாந்து மாநில ஆளுநர் பொறுப்பு காலியாகியுள்ளது. அடுத்ததாக துணை குடியரசு தலைவர் பதவிக்கு மஹாராஷ்டிரா ஆளுநரான சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடவுள்ள நிலையில், அந்த இடமும் காலியாக உள்ளது.

44

எனவே தமிழகத்தை சேர்ந்த 3 பேர் ஆளுநராக இருந்த நிலையில் தற்போது யாருமே ஆளுநராக இல்லை. இதனால், தமிழகத்தில் பா.ஜ.க,வுக்காக உழைத்தவர்களுக்கு கவர்னர் பதவி வழங்க, அக்கட்சியின் மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல். வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி வெற்றிக்கும் இது உதவும் என மேலிடத்தின் கணக்காக இருக்கிறது

அந்த வகையில், 'ஏற்கனவே இரு மாநில கவர்னராக இருந்த தமிழிசை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா, முன்னாள் துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி, பா.ஜ.க, மாநில துணை தலைவர் சக்கரவர்த்தி ஆகியோரது பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக பா.ஜ.க, மேலிட வட்டாரங்களில் பேச்சு பலமாக அடிபட்டு வருகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories