தனிப்பயனாக்கப்பட்ட மொழிபெயர்ப்பு: உங்கள் விருப்பப்படி!
மொழிபெயர்ப்பின் தொனி மற்றும் கட்டமைப்பை மாற்ற, பயனர்களுக்கு பல்வேறு விருப்பங்கள் வழங்கப்படும். "ஃபார்மல்", "சிம்பிளிஃபை", "கேஷுவல்", "ஆல்டர்நேட்டிவ் ட்ரான்ஸ்லேஷன்ஸ்", "ரீஃப்ரேஸ்", "ரீஜனல் வேரியண்ட்ஸ்" போன்ற பட்டன்களைப் பயன்படுத்தி, மொழிபெயர்ப்பை தங்கள் தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ளலாம்.
ஒரே தட்டலில் கருத்து: கூகுளுக்கு உதவும் பயனர்கள்!
மொழிபெயர்ப்பு சரியாக இருந்தால் "தம்ஸ் அப்" பட்டனையும், தவறாக இருந்தால் "தம்ஸ் டவுன்" பட்டனையும் தட்டி கருத்து தெரிவிக்கலாம். இது கூகுள் ட்ரான்ஸ்லேட் செயலியை மேம்படுத்த உதவும். மேலும், ஸ்பீக்கர் ஐகானை தட்டி மொழிபெயர்ப்பின் உச்சரிப்பையும் கேட்கலாம்.