கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போன் அமேசானில் பெரிய தள்ளுபடியுடன் கிடைக்கிறது. Tensor G5 சிப்செட், 48MP கேமரா, மற்றும் 4,970 mAh பேட்டரி போன்ற சக்திவாய்ந்த அம்சங்களுடன் ரூ.15,000 வரை விலை குறைப்பில் கிடைக்கிறது.
புதிய ஸ்மார்ட்போன் வாங்க நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த செய்தி. கூகுள் பிக்சல் 10 (Google Pixel 10) தற்போது Amazon-ல் பெரிய தள்ளுபடியில் கிடைக்கிறது. கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் OLED டிஸ்ப்ளே மற்றும் 120Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டுள்ளது. Corning Gorilla Glass Victus 2 பாதுகாப்புடன் இது மிகவும் வலுவானது. இதன் இதயம் என சொல்லப்படுவது Google-ன் சொந்த Tensor G5 சிப்செட், இது AI தொழில்நுட்பத்துடன் வேகமான தொழில்நுட்பம் வழங்குகிறது. இதனுடன் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வரை ஸ்டோரேஜ் கிடைக்கிறது.
24
கூகுள் பிக்சல் 10 அம்சங்கள்
கூகுள் பிக்சல் 10-ன் முக்கிய சிறப்பு அதன் கேமரா. இதில் 48MP முக்கிய லென்ஸ் (மேக்ரோ ஃபோகஸ்), 13MP அல்ட்ரா வைடு லென்ஸ், மற்றும் 10.8MP டெலிஃபோட்டோ சென்சார் (5x ஆப்டிகல் ஜூம்) உள்ளது. இதன் மூலம் சிறந்த டீட்டெய்லுடன் புகைப்படங்களை எடுக்க முடியும். செல்ஃபி மற்றும் வீடியோ கால் பிரியர்களுக்காக 10.5MP முன்புற கேமரா உள்ளது, இது தெளிவான புகைப்படங்களை வழங்குகிறது.
34
பேட்டரி மற்றும் சார்ஜிங் திறன்
இந்த மாடலில் 4,970 mAh பேட்டரி உள்ளது, இது நாள் முழுவதும் நீடிக்கும். 30W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. சக்திவாய்ந்த கேமரா, பளபளப்பான டிஸ்ப்ளே மற்றும் AI ஆதரவு கொண்ட கூகுள் பிக்சல் 10, தற்போதைய விலை குறைப்புடன் iPhone-க்கு நேரடி போட்டியாக திகழ்கிறது.
ரூ.79,999 என்ற ஆரம்ப விலையில் தற்போது சுமார் ரூ.15,000 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. நேரடியாக ரூ.11,570 தள்ளுபடி கிடைக்கிறது. இதனால் விலை ரூ.68,429 ஆக குறைகிறது. மேலும் HDFC வங்கியின் கிரெடிட் கார்டு மூலம் EMI எடுத்தால் கூடுதலாக ரூ.4,000 தள்ளுபடி கிடைக்கும். எனவே நீங்கள் அமேசானில் இந்த பவர்புல் ஸ்மார்ட்போனை மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம்.