கூகுளில் மீண்டும் பணிநீக்கம்! இந்திய ஊழியர்களுக்கு ஆப்பு வைக்கும் திட்டம்!

Published : Apr 17, 2025, 12:43 PM IST

கூகுள் மீண்டும் பணிநீக்கம் செய்ய தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் விளம்பரம், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவுகளில் உள்ள ஊழியர்கள் பாதிக்கப்படலாம். செலவுகளைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

PREV
14
கூகுளில் மீண்டும் பணிநீக்கம்! இந்திய ஊழியர்களுக்கு ஆப்பு வைக்கும் திட்டம்!
Google layoffs

கூகுள் பணிநீக்கம்:

கூகுள் மற்றொரு சுற்று பணிநீக்கங்களுக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இந்தியாவில் விளம்பரம், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவுகளில் உள்ள ஊழியர்கள் பாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிசினஸ் ஸ்டாண்டர்டின் அறிக்கையின்படி, கூகுள் நிறுவனத்தின் ஹைதராபாத் மற்றும் பெங்களூரு அலுவலகங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று தெரிகிறது.

24
Google restructuring strategy

இந்தியாவைப் பாதிக்கும்:

கூகுள் தரப்பில் எத்தனை பேர் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர் என அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. இருந்தாலும் விளம்பரம், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பணிகளில் உள்ள ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆண்ட்ராய்டு, பிக்சல் ஸ்மார்ட்போன்கள், குரோம் பிரவுசர் ஆகிய பிரிவுகளில் நூற்றுக்கணக்கான ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கும் சமீபத்திய முடிவைத் தொடர்ந்து அடுத்த பணிநீக்க நடவடிக்கை நடைபெற்று வருகிறது.

34
Google cuts jobs

கூகுளின் மறுசீரமைப்புத் திட்டம்:

செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்கும் செலவுகளைக் குறைப்பதற்கும் கூகுள் மேற்கொண்டுள்ள தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த பணிநீக்கங்கள் உள்ளன. இந்த ஆண்டின் தொடக்கத்தில், நிறுவனம் அதன் இயங்குதளங்கள் மற்றும் சாதனங்கள் பிரிவில் பணியாளர்களைக் குறைத்தது. முன்னதாக, தாமாக முன்வந்து விலகுபவர்களுக்கு சிறப்புத் திட்டங்களை அறிவித்தது.

இப்போது கூகுள் நிறுவனம் மிகவும் சுறுசுறுப்பாகவும் திறம்படவும் செயல்படுவதில் கவனம் செலுத்துவதாக கூகுள் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். கூகுள் தனது மறுசீரமைப்புத் திட்டத்தில் தீவிரமாக இருப்பதால், இந்திய ஊழியர்களும் வரும் வாரங்களில் தங்கள் பணிகளில் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்ள நேரிடும் என்று கூறப்படுகிறது.

44
Google Platforms and Devices

கூகுள் இயங்குதளங்கள் மற்றும் சாதனங்கள்:

ஆண்ட்ராய்டு மென்பொருள், பிக்சல் சாதனங்கள் மற்றும் குரோம் பிரவுசரில் பணிபுரியும் குழுக்கள் உட்பட பல்வேறு பிரிவுகளில் இருந்து கூகுள் கடந்த வாரம் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்ததாகக் கூறப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories