Jio, Airtel SIM Stay Active After 90 Days Without Recharge
இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடோபோன் ஐடியா ஆகிய தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களும், அரசு நிறுவனமான பிஎஸ்என்எல்லும் தொலைத்தொடர்பு சேவையை வழங்கி வருகின்றன. ஜியோ, ஏர்டெல், வோடோபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் பல்வேறு விலைகளில் ரீசார்ஜ் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் இழுப்பதற்காக போட்டி போட்டு செயல்பட்டு வருகின்றன.
24
இரண்டாவது சிம் பயன்படுத்துவர்களுக்கு சிக்கல்
கடந்த ஆண்டு ஜூலை மாதம் கட்டண உயர்வு அமலுக்கு வந்ததிலிருந்து ரீசார்ஜ் திட்டங்கள் அதிக விலை கொண்டதாக மாறிவிட்டன. தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் (TRAI) தலையீட்டுக்குப் பிறகு வாய்ஸ்-மட்டும் (voice-only) திட்டங்களை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கத் தொடங்கியுள்ளன. இருந்தாலும் இரண்டாவது சிம் கார்டைப் பயன்படுத்துபவர்களுக்கு இந்தத் திட்டங்கள் இன்னும் விலை அதிகம்.
அடிப்படை ரீசார்ஜ் தேவையில்லை
பல காரணங்களுக்காக பலர் இரண்டாவது சிம் கார்டைப் பயன்படுத்துகின்றனர். சிலர் வீட்டில் ஒரு சிம் கார்டிலும், அலுவலகத்தில் மற்றொரு சிம் கார்டிலும் நல்ல நெட்வொர்க் கவரேஜைப் பெறுகிறார்கள். மற்றவர்கள் வங்கிச் சேவைகளுக்காகவே ஒரு தனி சிம் கார்டைப் பயன்படுத்துகின்றனர். இதைச் சரிசெய்ய, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் திட்டம் இல்லாமலேயே, நீண்ட காலத்திற்கு இன்கமிங் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளைப் பெற பயனர்களை அனுமதிக்கின்றன. இதன் மூலம் அவர்கள் எந்தவொரு அடிப்படை ரீசார்ஜ் இல்லாமலும் இணைப்பில் இருக்க முடியும்.
34
90 நாளுக்கு பிறகும் சிம் ஆக்டிவாக இருக்கும்
நீங்கள் தொடர்ந்து 90 நாட்களுக்கு உங்கள் மொபைல் எண்ணைப் பயன்படுத்தவில்லை என்றால் அது செயலிழக்கப்படும். இதில் வாய்ஸ் அல்லது வீடியோ அழைப்புகள், வெளிச்செல்லும் குறுஞ்செய்திகள், அல்லது டேட்டா பயன்பாடு ஆகியவை அடங்கும். ஆனாலும் இதற்கு ஒரு நடைமுறை உள்ளது. 90 நாட்கள் முடிவில் உங்கள் கணக்கு இருப்பு ரூ.20க்கு மேல் இருந்தால், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தானாகவே ரூ.20 ஐ கழித்து, உங்கள் பயன்படுத்தாத காலத்தை மேலும் 30 நாட்களுக்கு நீட்டிக்கும். உங்கள் இருப்பு ரூ.20 க்கு கீழ் குறையும் வரை இந்த நடைமுறை தொடரும், அதன் பிறகு உங்கள் எண் செயலிழக்கப்படும்
உங்கள் எண் செயலிழக்கப்பட்டால், ரூ.20 கட்டணம் செலுத்தி அதை மீண்டும் ஆக்டிவேட் செய்ய உங்களுக்கு 15 நாட்கள் அவகாசம் உள்ளது. இந்தக் காலக்கெடுவிற்குள் நீங்கள் பணம் செலுத்தத் தவறினால், உங்கள் எண் நிரந்தரமாகத் துண்டிக்கப்படும். இந்த கொள்கை அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.