உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட் எந்தெந்த கருவிகளில் (Devices) தற்போது பயன்பாட்டில் உள்ளது என்பதைக் கண்டறிவது மிகவும் எளிது. இதோ அதற்கான வழிமுறைகள்:
1. உங்கள் கணினி அல்லது மொபைல் பிரவுசரில் myaccount.google.com என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.
2. அதில் உள்ள ‘பாதுகாப்பு’ (Security) விருப்பத்திற்குச் சென்று, கீழே ஸ்க்ரோல் செய்யவும்.
3. அடுத்து, ‘உங்கள் கருவிகள்’ (Your Devices) என்ற பகுதிக்குச் சென்று, ‘அனைத்து கருவிகளையும் நிர்வகிக்கவும்’ (Manage All Devices) என்பதைக் கிளிக் செய்யவும்.
4. இந்த பட்டியலில், நீங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டில் லாக்-இன் செய்த அனைத்துக் கருவிகளையும் பார்க்கலாம். அதில் உங்களுக்குச் சொந்தமில்லாத அல்லது சந்தேகத்திற்குரிய கருவிகள் ஏதேனும் இருந்தால், உடனே அதைக் கிளிக் செய்து ‘வெளியேறு’ (Sign out) என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அதன் பிறகு, உடனடியாக உங்கள் ஜிமெயில் கடவுச்சொல்லை (Password) மாற்றி விடுங்கள்.