ஏர்போர்ட், மார்க்கெட் பக்கம் போறீங்களா? இந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க.. அக்கவுண்ட் "ஜீரோ" ஆகிடும் - பகீர் ரிப்போர்ட்!

Published : Jan 05, 2026, 09:39 PM IST

Scam பயணிகளே உஷார்! கூட்ட நெரிசலில் உங்கள் வங்கி கணக்கை காலி செய்யும் "கோஸ்ட் டேப்பிங்" மோசடி. NFC கார்டுகளை பாதுகாப்பது எப்படி? முழு விவரம்.

PREV
16
Scam உலகம் முழுவதும் பரவும் புதிய டிஜிட்டல் மோசடி

நீங்கள் அடிக்கடி பயணம் செய்பவரா? ஷாப்பிங் செய்ய கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளை அதிகம் பயன்படுத்துபவரா? அப்படியென்றால் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது. உலகம் முழுவதும் "கோஸ்ட் டேப்பிங்" (Ghost Tapping) என்ற புதிய வகை டிஜிட்டல் பண மோசடி வேகமாகப் பரவி வருகிறது. பிரபலமான சுற்றுலாத் தலங்களில், குறிப்பாகக் கூட்டம் அதிகம் உள்ள விமான நிலையங்கள், திருவிழாக் கூட்டங்கள் மற்றும் பரபரப்பான மார்க்கெட் பகுதிகளில் பயணிகளைக் குறிவைத்து இந்த மோசடி அரங்கேற்றப்படுகிறது.

26
"கோஸ்ட் டேப்பிங்" என்றால் என்ன?

தற்போது 'காண்டாக்ட்லெஸ்' (Contactless) முறையில் பணம் செலுத்துவது மிகவும் பிரபலமாகிவிட்டது. இதனைப் பயன்படுத்திக்கொள்ளும் மோசடி கும்பல், 'கோஸ்ட் டேப்பிங்' முறையைக் கையில் எடுத்துள்ளது. இதில், பாதிக்கப்பட்டவருக்குத் தெரியாமலேயே, NFC தொழில்நுட்பம் கொண்ட கருவி மூலம் அமைதியாகப் பணம் திருடப்படுகிறது. உங்கள் கார்டு அல்லது ஸ்மார்ட்போனில் 'Tap-to-Pay' வசதி ஆன் செய்யப்பட்டிருந்தால், மோசடி நபர் உங்கள் அருகில் நின்றுகொண்டே வயர்லஸ் தொழில்நுட்பம் மூலம் உங்கள் பணத்தைத் திருட முடியும். இதற்குப் பின் நம்பரோ அல்லது OTP-யோ தேவைப்படுவதில்லை என்பதுதான் அதிர்ச்சியான விஷயம்.

36
மோசடி அரங்கேறும் விதம்

கான்டாக்ட்லெஸ் கார்டுகள், ஆப்பிள் பே (Apple Pay), கூகுள் பே (Google Pay) போன்றவற்றில் பயன்படுத்தப்படும் அதே 'NFC' (Near Field Communication) தொழில்நுட்பத்தைத்தான் திருடர்களும் பயன்படுத்துகின்றனர்.

• மோசடி நபர்கள் மாற்றியமைக்கப்பட்ட சிறிய NFC ரீடர்கள் அல்லது ஸ்மார்ட்போன்களை கையில் வைத்திருப்பார்கள்.

• விமான நிலையங்கள் அல்லது சுற்றுலாத் தலங்களில் உள்ள கூட்ட நெரிசலில் பயணிகளோடு பயணிகளாகக் கலந்துகொள்வார்கள்.

• உங்கள் அருகில் வந்து உரசுவது போல நின்று, சில நொடிகளில் உங்கள் பாக்கெட்டில் உள்ள கார்டிலிருந்து பணத்தை பரிவர்த்தனை செய்துவிடுவார்கள்.

• சில நேரங்களில் போலி வியாபாரிகள், சிறிய பொருட்களுக்கு 'Tap-to-Pay' செய்யச் சொல்லி, நீங்கள் கவனிக்காத நேரத்தில் கூடுதல் தொகையைப் பிடித்துவிடுவார்கள்.

46
அதிக ஆபத்துள்ள நாடுகள் எவை?

இதுவரை அதிகாரப்பூர்வமாக நாடு வாரியான தரவுகள் வெளியிடப்படவில்லை என்றாலும், சைபர் செக்யூரிட்டி நிபுணர்களின் கூற்றுப்படி, சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் பின்வரும் பகுதிகளில் இந்த மோசடி அதிகரித்துள்ளது:

• அமெரிக்கா (திருவிழாக்கள் மற்றும் பெரிய கூட்டங்களில்)

• இங்கிலாந்து மற்றும் மேற்கு ஐரோப்பாவின் சில பகுதிகள்

• பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி

• தாய்லாந்து, இந்தோனேசியா

• பிரபலமான சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் போக்குவரத்து மையங்கள்.

56
சுற்றுலாப் பயணிகள் குறிவைக்கப்படுவது ஏன்?

சர்வதேச பயணங்களின்போது, பயணிகள் வேகம் மற்றும் சௌகரியத்திற்காக 'Tap-to-Pay' வசதியை அதிகம் நம்பியிருக்கிறார்கள். கூட்ட நெரிசலான சூழலில் சுற்றியிருப்பவர்களைப் பற்றிக் கவனிக்கத் தவறுகிறார்கள். மேலும், வெளிநாட்டுப் பண மதிப்பில் உள்ள குழப்பம் காரணமாக, கணக்கில் அதிக பணம் கழிக்கப்பட்டாலும் உடனடியாக அதை உணர்வதில்லை. வங்கிப் பரிவர்த்தனை குறுஞ்செய்திகளை (Alerts) உடனடியாகப் பார்க்காததும் மோசடி கும்பலுக்குச் சாதகமாக அமைகிறது.

66
தற்காத்துக்கொள்வது எப்படி?

அடுத்த முறை வெளிநாடு செல்லும்போது "கோஸ்ட் டேப்பிங்" மோசடியில் சிக்காமல் இருக்கக் கீழ்க்கண்டவற்றைப் பின்பற்றவும்:

• பயன்பாட்டில் இல்லாதபோது உங்கள் ஸ்மார்ட்போனில் NFC வசதியை 'ஆஃப்' (Turn off) செய்து வையுங்கள்.

• RFID-blocking வாலட்டுகளைப் பயன்படுத்துங்கள். இவை உங்கள் கார்டில் உள்ள சிக்னல்களைத் திருடர்கள் ஸ்கேன் செய்ய முடியாமல் தடுக்கும்.

• சாலையோரக் கடைகள் அல்லது அங்கீகரிக்கப்படாத விற்பனையாளர்களிடம் கார்டை 'Tap' செய்வதைத் தவிர்க்கவும்.

• வங்கிச் செயலியில் உடனடிப் பரிவர்த்தனை அறிவிப்புகளை (Instant Alerts) ஆன் செய்து வையுங்கள்.

• பாதுகாப்பான பயோமெட்ரிக் அங்கீகாரம் (Biometric authentication) கொண்ட மொபைல் வாலட்டுகளைப் பயன்படுத்துவது நல்லது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories