புடவைக்கு புது ட்ரெண்ட்.. ஜென் Z-யை ஆச்சரியப்படுத்திய கூகுள் நானோ பனானா AI!

Published : Sep 14, 2025, 03:04 PM IST

கூகுள் நானோ பனானா AI மூலம் எப்படி ரெட்ரோ புடவை லுக்ஸ் உருவாக்குவது என்பதை அறிந்து கொள்ளுங்கள். இந்த புதிய AI-ஐ பயன்படுத்தி சிறந்த விண்டேஜ் தோற்றத்தை பெற உதவும் 3 சிறந்த ப்ராம்ப்ட்களை இங்கே காணலாம்.

PREV
14
ஜென் Z-இளைஞர்கள்

சமீபகாலமாக, சமூக வலைதளங்களில், குறிப்பாக ஜென் Z-இளைஞர்கள் மத்தியில், ரெட்ரோ தோற்றத்திலான புகைப்படங்கள் பெரும் வைரலாகி வருகின்றன. இந்த டிரெண்டுக்கு முக்கிய காரணம், கூகுள் ஜெமினி AI-யில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள "நானோ பனானா" என்ற புதிய கருவிதான். இது உருவாக்கும் படங்கள் மிகவும் யதார்த்தமாகவும், நுண்ணிய விவரங்களுடனும் காணப்படுகின்றன. முகபாவங்கள், உடைகள், பின்னணி என அனைத்தும் நிஜமானவை போலவே தோன்றுவதால், இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

24
நானோ பனானா AI என்றால் என்ன?

"நானோ பனானா" என்பது கூகுளின் ஜெமினி 2.5 ஃப்ளாஷ் AI சாட்பாட்டில் உள்ள ஒரு புதிய இமேஜ் உருவாக்கும் கருவி. இது பழைய, விண்டேஜ் காலத்து படங்களை உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளது. அதன் துல்லியமான, யதார்த்தமான படங்கள், பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் அதிக அளவில் பகிரப்படுகின்றன. இந்த கருவி இலவசமாக கிடைப்பதால், பயனர்கள் மத்தியில் இதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

34
ரெட்ரோ படத்தை உருவாக்குவது எப்படி?

உங்களுக்குப் பிடித்த ரெட்ரோ படத்தை உருவாக்க, நீங்கள் கூகுள் AI ஸ்டுடியோ வலைத்தளம் அல்லது கூகுள் ஜெமினி செயலிக்குச் செல்ல வேண்டும்.

• ஜெமினி இன்டர்ஃபேஸில், "நானோ பனானா" படத்தை உருவாக்கும் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

• உங்களுடைய சொந்தப் படத்தை ரெட்ரோவாக மாற்ற விரும்பினால், ஒரு உயர் தெளிவுத்திறன் (HD) படத்தை அப்லோட் செய்ய வேண்டும்.

• அதன் பிறகு, நீங்கள் விரும்பும் ரெட்ரோ படத்தைப் பற்றி ஒரு தெளிவான கட்டளை (prompt) டைப் செய்ய வேண்டும்.

• கட்டளையை உள்ளிட்டு, "Run" அல்லது "Enter" பொத்தானை அழுத்தவும். AI ஆனது உங்கள் உள்ளீட்டின் அடிப்படையில் ஒரு ரெட்ரோ படத்தை உருவாக்கும்.

44
ரெட்ரோ புடவை லுக்ஸ் உருவாக்க சிறந்த 3 ப்ராம்ப்ட்கள்!

உங்களுடைய படங்களை ரெட்ரோ புடவை லுக்ஸில் மாற்ற, இங்கே சில உதாரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ப்ராம்ப்ட் 1:

அப்லோட் செய்யப்பட்ட படத்தை ஒரு பிரமிக்க வைக்கும் 4K HD போர்ட்ரெய்ட்டாக மாற்றவும். subject-க்கு கருமையான, அலை அலையான, நீண்ட முடி தோள்களில் அலைபாய வேண்டும். அவள் மெல்லிய, சிவப்பு நிற புடவை அணிந்திருக்க வேண்டும், அது ஒரு தோளின் மேல் நேர்த்தியாக விழுந்திருக்க வேண்டும். அவளுடைய வலது காதின் பின்புறம் வெள்ளை பூக்கள் செருகப்பட்டிருக்க வேண்டும். அவள் வலதுபுறம் லேசாகப் பார்த்தபடி, அமைதியான புன்னகையுடன் இருக்க வேண்டும். அவளுடைய முகம் அப்லோட் செய்யப்பட்ட படத்தில் இருப்பது போலவே, எந்த மாற்றமும் இல்லாமல் இருக்க வேண்டும். பின்னணியில் ஒரு வெற்று, மிதமான நிறச் சுவர் இருக்க வேண்டும், அதன் மீது வலதுபுறத்தில் இருந்து வரும் மிதமான வெளிச்சம், அவளுடைய profil-ன் நிழலை மென்மையாகவும், தெளிவாகவும் சுவரில் காட்ட வேண்டும். ஒட்டுமொத்தப் படமும் ரெட்ரோ மற்றும் கலைநயத்துடன் இருக்க வேண்டும்.

ப்ராம்ப்ட் 2:

அப்லோட் செய்யப்பட்ட படத்தின் அடிப்படையில், ரெட்ரோ மற்றும் விண்டேஜ் பாணியிலான, அதே சமயம் பிரகாசமான, ஒரு படத்தை உருவாக்கவும். படத்தில் உள்ள பெண், ஊதா நிற ஷிஃபான் புடவை அணிந்து, '90s திரைப்பட 'baddie' போல தோற்றமளிக்க வேண்டும். அவளுக்கு கருமையான, பளபளப்பான முடி மற்றும் காற்றில் அசைவது போல ஒரு சிறிய பூ செருகப்பட்டிருக்க வேண்டும். அவள் ஒரு பழைய மரக் கதவுக்கு எதிராக நின்று, நிழல்கள் மற்றும் மாறுபட்ட நிறங்கள் ஒரு மர்மமான, கலைநயமிக்க காட்சியை உருவாக்க வேண்டும். அவள் தன் முடியை சரிசெய்வது போல தோற்றமளிக்க வேண்டும்.

ப்ராம்ப்ட் 3:

அப்லோட் செய்யப்பட்ட படத்தை ரெட்ரோ, விண்டேஜ் மற்றும் பிரகாசமான படமாக மாற்றவும். முக அம்சங்கள் மாறாமல் இருக்க வேண்டும். subject-க்கு ஒரு உறுதியான வண்ண பனாரசி புடவை, '90s திரைப்படத்தில் வரும் விண்டேஜ் அழகியல் தோற்றம் இருக்க வேண்டும். அவளுக்கு கருமையான, பளபளப்பான கூந்தல், அதில் ஒரு சிறிய பூ செருகப்பட்டிருக்க வேண்டும். பெண் ஒரு வெள்ளை சுவருக்கு எதிராக நின்று, மென்மையான, கலைநயமிக்க மற்றும் உணர்வுபூர்வமான சூழலில் இருக்க வேண்டும். சூரிய அஸ்தமனம் அல்லது 'golden hour' போன்ற ஒரு பொன்னிற ஒளி அவளது முகத்தில் பட்டு, அவளது நிழல் சுவரில் விழ வேண்டும். பின்னணி குறைந்தபட்சமாகவும், சிறிது texture-உடனும் இருக்க வேண்டும். அவளது முகத்தில் அமைதியான, மகிழ்ச்சியான உணர்வு இருக்க வேண்டும். இறுதியான படம் HD தரத்தில் இருக்க வேண்டும். நீங்கள் தலைமுடி நிறம் மற்றும் ஸ்டைலை மாற்றலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories