ஐபோன்கள் மட்டுமின்றி, ஆண்ட்ராய்டு சந்தையிலும் பெரிய அளவில் தள்ளுபடிகள் காத்திருக்கின்றன. குறிப்பாக, Snapdragon சிப்செட் கொண்ட Samsung Galaxy S24 மாடல், அதன் அசல் விலையான ₹74,999-ல் இருந்து பாதியாகக் குறைந்து, ₹38,999 என்ற ஆரம்ப விலையில் கிடைக்கும். அதேபோல், Samsung Galaxy S24 FE மாடலும் ₹59,999-ல் இருந்து ₹29,999-க்கு கிடைக்கிறது. இதுபோக, மிட்-பட்ஜெட் மற்றும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களிலும் சிறப்பு விலை குறைப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன:
• Motorola Edge 60 Fusion ஸ்மார்ட்போனின் உண்மையான விலை ₹25,999. ஆனால், தற்போது சலுகை விலையாக ₹18,999-க்கு விற்கப்படுகிறது.
• Motorola G96 ஸ்மார்ட்போன், பழைய விலையான ₹20,999-க்கு பதிலாக, இப்போது வெறும் ₹15,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.