ஃபேஸ்புக் ப்ரொஃபைல் லாக் என்றால் என்ன?
ஃபேஸ்புக் ப்ரொஃபைல் லாக் என்பது பயனர்கள் தங்கள் ப்ரொஃபைலை கட்டுப்படுத்த உதவும் பாதுகாப்பு வசதி. இதை செயல்படுத்தும்போது, உங்கள் புகைப்படங்கள், பதிவுகள் மற்றும் பிற தனிப்பட்ட தகவல்களை உங்கள் நண்பர்கள் பட்டியலில் இல்லாதவர்கள் பார்க்க முடியாது. உங்கள் முழு அளவு ப்ரொஃபைல் படம், கவர் போட்டோ, ஸ்டோரிஸ் மற்றும் புதிய பதிவுகளை உங்கள் நண்பர்கள் மட்டுமே பார்க்க முடியும். பொதுவில் பகிர்ந்த பழைய பதிவுகள் கூட நண்பர்கள் மட்டும் பார்க்கும் வகையில் மாற்றப்படும். இந்த வசதி, உங்கள் தனிப்பட்ட தகவல்களை அந்நியர்கள் அல்லது பின் தொடர்பவர்களிடமிருந்து பாதுகாக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.