கார்கள் மற்றும் ராக்கெட்டுகள் மூலம் தொழில்நுட்ப உலகில் புரட்சி செய்த எலான் மஸ்க், இப்போது மற்றொரு பிரம்மாண்ட திட்டத்தைக் கையில் எடுத்துள்ளார். சுமார் பத்து லட்சம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி, சூரிய சக்தியால் இயங்கும் 'AI டேட்டா சென்டர்களை' (AI Data Centers) விண்வெளியில் அமைக்கப்போவதாக அவர் அறிவித்துள்ளார். பூமியில் மின்சாரத் தட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் குறைக்க இது உதவும் என்பது அவர் வாதம். "விண்வெளியில் எப்போதும் சூரியன் பிரகாசிக்கும்" என்று அவர் தனது ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
25
வெப்பத்தைச் சமாளிப்பது எப்படி?
விண்வெளியில் டேட்டா சென்டர்கள் அமைப்பதில் உள்ள மிகப்பெரிய சவால் வெப்ப மேலாண்மை. பூமியில் டேட்டா சென்டர்களைக் குளிர்விக்கத் தண்ணீர் மற்றும் காற்றைப் பயன்படுத்தலாம். ஆனால், விண்வெளியில் காற்று இல்லாத வெற்றிடம் (Vacuum) இருப்பதால், உருவான வெப்பம் வெளியேற வழியில்லை. தெர்மாஸ் ஃபிளாஸ்க் போல வெப்பம் உள்ளேயே தங்கிவிடும் அபாயம் உள்ளது. இதைச் சமாளிக்க ராட்சத ரேடியேட்டர் பேனல்கள் தேவைப்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். குளிரூட்டப்படாத கணினி சிப் பூமியை விட விண்வெளியில் மிக விரைவில் உருகிவிடும்.
35
விண்வெளிக் குப்பைகள் மற்றும் மோதல் அபாயம்
ஏற்கனவே விண்வெளியில் பழைய செயற்கைக்கோள்கள் மற்றும் ராக்கெட் பாகங்கள் குப்பைகளாகச் சுற்றி வருகின்றன. எலான் மஸ்க் திட்டமிடும் 10 லட்சம் செயற்கைக்கோள்களால் விண்வெளி நெரிசல் அதிகமாகும். ஒரு சிறிய விபத்து நடந்தாலும் அது சங்கிலித் தொடர் விபத்துகளுக்கு (Chain Reaction) வழிவகுக்கும். இது வானிலை ஆய்வு மற்றும் அவசரத் தொடர்பு சேவைகளைப் பாதிக்கும் அபாயம் உள்ளது. விண்வெளியில் மணிக்கு 17,500 மைல் வேகத்தில் பொருட்கள் பயணிப்பதால், சிறிய மோதலும் பெரிய சேதத்தை ஏற்படுத்தும்.
பூமியில் சர்வரில் பழுது ஏற்பட்டால் உடனே சரிசெய்யலாம். ஆனால் விண்வெளியில் அது சாத்தியமில்லை. சூரியனிலிருந்து வரும் அதிகப்படியான கதிர்வீச்சு (Radiation) எலக்ட்ரானிக் பாகங்களை விரைவில் சேதப்படுத்தும். பழுதான சிப்களை மாற்ற விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவது நடைமுறையில் சாத்தியமற்றது. இதற்குத் தீர்வாக, பழுதானால் மாற்றிக்கொள்ளும் வகையில் கூடுதல் சிப்களை செயற்கைக்கோள்களில் இணைக்கலாம். ஆனால் இது செலவை அதிகரிக்கும்.
55
போட்டியும் எலான் மஸ்கின் ஆதிக்கமும்
கூகுள் (Google) மற்றும் அமேசான் (Amazon) போன்ற நிறுவனங்களும் விண்வெளி டேட்டா சென்டர்கள் குறித்து ஆராய்ந்து வருகின்றன. ஆனால் எலான் மஸ்கிடம் சொந்தமாக ராக்கெட்டுகள் (SpaceX) இருப்பது அவருக்குப் பெரிய பலம். போட்டியாளர்கள் தங்கள் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த மஸ்க்கையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. தனக்குக் குறைந்த செலவிலும், மற்றவர்களுக்கு அதிக கட்டணமும் நிர்ணயிப்பதன் மூலம் இந்த விண்வெளிப் போட்டியில் மஸ்க் முன்னிலை வகிக்கிறார்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.