டிவிக்கு இணையான ஸ்மார்ட் வசதிகள், 4K தெளிவுத்திறன் மற்றும் 300 இன்ச் வரையிலான பிரமாண்ட திரையை மிகக் குறைந்த செலவில் வழங்கும் 5 சிறந்த புரொஜெக்டர்கள் பற்றி பார்போம்.
பெரும்பாலான வீடுகளில் 'ஸ்மார்ட் டிவி' மட்டுமே பிரதான ஹோம் தியேட்டராகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், திரையரங்கு போன்ற சிறப்பான காட்சி அனுபவத்தை விரும்புபவர்கள், பல வெளிப்புற சாதனங்களை இணைத்து பெரிய திரையை உருவாக்கவே விரும்புவார்கள். பொதுவாக, இத்தகைய அனுபவத்தைப் பெற பெரிய டிவி வாங்குவதே ஒரே வழி எனப் பலரும் நினைக்கிறார்கள். ஆனால், அதற்கு மாற்றாக புரொஜெக்டர்கள் (Projectors) மிகச் சிறந்த மற்றும் குறைந்த விலையிலான தேர்வாக உருவெடுத்துள்ளன.
முன்பெல்லாம் திரையரங்க உணர்வைத் தர மட்டுமே புரொஜெக்டர்கள் பயன்பட்டன. ஆனால், இன்றைய நவீன புரொஜெக்டர்கள் ஸ்மார்ட் டிவி-க்களைப் போலவே ஆப்ஸ்கள் (Apps), வாய்ஸ் கன்ட்ரோல் மற்றும் பல்வேறு இணைப்பு வசதிகளுடன் வருகின்றன. ஒரு நல்ல ஹோம் தியேட்டர் புரொஜெக்டர் (சுமார் ரூ.83,000) பட்ஜெட்டிற்குள் கிடைக்கிறது. 65-இன்ச் ஸ்மார்ட் டிவி-க்களின் விலையை அடிப்படையாகக் கொண்டு, டிவி-க்கு மாற்றாக வாங்கக்கூடிய 5 சிறந்த பட்ஜெட் புரொஜெக்டர்களின் லிஸ்ட்களை பற்றி பார்போம்.
சிறப்பம்சங்கள் - 300 இன்ச் வரை திரையிடும் வசதி மற்றும் 3,000 லூமன்ஸ் (Lumens) பிரகாசம் (Brightness).
ஸ்மார்ட் வசதிகள் - 'ஆண்ட்ராய்டு டிவி' (Android TV) தளம் மூலம் இயங்குகிறது. நெட்ஃபிலிக்ஸ் (Netflix), ஆப்பிள் டிவி+, அமேசான் பிரைம், யூடியூப் போன்ற செயலிகளைப் பயன்படுத்தலாம். கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant) மூலம் குரல் வழித் தேடலும் உள்ளது.
குறைபாடுகள் - இதன் அதிகபட்ச ரெசல்யூஷன் Full HD 1080p மட்டுமே. (4K விரும்பிகளுக்கு இது சற்று ஏமாற்றமாக இருக்கலாம்).
வாடிக்கையாளர் கருத்து: அமேசானில் 74% நல்ல மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. மேலும் பட்ஜெட் விலையை விரும்புவோருக்கு, இதன் குறைந்த ரெசல்யூஷன் மாடலான CO-W01 மாடலும் கிடைக்கிறது.
36
எப்சன் லைஃப்ஸ்டுடியோ பாப் பிளஸ் (Epson Lifestudio Pop Plus)
விலை - ரூ.45,000
சிறப்பம்சங்கள் - இது ஒரு 4K ரெசல்யூஷன் புரொஜெக்டர் ஆகும். 150 இன்ச் வரை திரையிடலாம். 700 லூமன்ஸ் பிரகாசம் கொண்டது.
ஆடியோ வசதி - இதில் போஸ் (Bose) நிறுவனத்தின் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளமைக்கப்பட்டுள்ளன (Built-in). இதனால் தனியாக ஸ்பீக்கர் சிஸ்டம் இல்லாமலேயே சிறந்த ஒலியைப் பெற முடியும்.
ஸ்மார்ட் வசதிகள் - 'கூகுள் டிவி' (Google TV) தளம் கொண்ட இதில் டிஸ்னி+, நெட்ஃபிலிக்ஸ் போன்ற செயலிகள் உள்ளன. 'Epson Projection Studio' ஆப் மூலம் நமது சொந்த வீடியோக்களையும் திரையிடலாம்.
வாடிக்கையாளர் கருத்து - அமேசானில் 4.1 ஸ்டார் மதிப்பெண் பெற்றுள்ளது. சிறந்த பட்ஜெட் 4K புரொஜெக்டர் எனப் பயனர்களால் பாராட்டப்படுகிறது.
சிறப்பம்சங்கள் - மிகவும் குறைந்த பட்ஜெட்டில் வாங்க நினைப்பவர்களுக்கு இது சிறந்த தேர்வு. 50 இன்ச் முதல் 300 இன்ச் வரை திரையிடும் வசதி கொண்டது.
தொழில்நுட்பம் - இது 1080p ரெசல்யூஷனில் இயங்கினாலும், 4K வீடியோ உள்ளடக்கங்களைச் (Content) ஆதரித்து 1080p-ஆக மாற்றித் தரும் (Downsampling). டால்பி ஆடியோ (Dolby Audio) ஆதரவு கொண்ட 5W ஸ்பீக்கர்கள் இதில் உள்ளன.
குறைபாடுகள் - இதன் பிரகாசம் 200 லூமன்ஸ் மட்டுமே. எனவே, வெளிச்சம் இல்லாத அல்லது இருட்டான அறைகளில் மட்டுமே தெளிவான காட்சியைக் கொடுக்கும்.
வாடிக்கையாளர் கருத்து - பெஸ்ட் பை (Best Buy) தளத்தில் வாடிக்கையாளர்கள் அனைவரும் இதற்கு 5-க்கு 5 ஸ்டார் மதிப்பெண் வழங்கி, டிவி-க்குச் சிறந்த மாற்று எனக் குறிப்பிட்டுள்ளனர்.
56
ஈகோஸ்கை U1 புரோ (Ecosky U1 Pro)
விலை - ரூ.50,000
சிறப்பம்சங்கள் - உண்மையான (Native) 4K சிப் மற்றும் தெளிவான காட்சியளிக்கும் கிளாஸ் ஆப்டிகல் லென்ஸ் கொண்டது. 1,700 ANSI லூமன்ஸ் பிரகாசம் கொண்டதால், சற்று வெளிச்சம் உள்ள அறைகளிலும் கூடப் பயன்படுத்தலாம்.
கூடுதல் அம்சங்கள் - நீண்ட நேரம் பார்க்கும் போது போக்கஸ் (Focus) குறையாமல் இருக்க 'லிக்விட்-ஏர் கூலிங் சிஸ்டம்' உள்ளது. சிறந்த பேஸ் (Bass) வசதியுடன் கூடிய 16W Hi-Fi ஸ்பீக்கர்கள் உள்ளன.
இணைப்பு வசதிகள் - சவுண்ட்பார்களை இணைக்க ARC ஆதரவு, 2 HDMI 2.1 போர்ட்கள் மற்றும் USB போர்ட்கள் மூலம் கேமிங் கன்சோல்கள் மற்றும் ஸ்ட்ரீமிங் சாதனங்களை எளிதாக இணைக்கலாம்.
வாடிக்கையாளர் கருத்து - அமேசானில் 4.8 ஸ்டார் மதிப்பெண் பெற்று மிகச்சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
66
ஆப்டோமா PK31 போட்டான் லைஃப்
விலை - ரூ.1,04,440
சிறப்பம்சங்கள் - Native 4K மற்றும் HDR 10 ஆதரவு கொண்டது. 150 இன்ச் திரை அளவு மற்றும் 900 லூமன்ஸ் பிரகாசம் தருகிறது.
கேமிங் சிறப்பு - கேமிங் பிரியர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 1080p (240Hz)-ல் வெறும் 4.6ms மற்றும் 4K (60Hz)-ல் 16ms என்ற குறைந்த இன்புட் லேக் (Input Lag) கொண்டுள்ளது.
குறைபாடுகள் - இதில் சொந்தமாக ஸ்மார்ட் டிவி ஆப்ஸ்கள் (Streaming services) இல்லை. ஆனால் HDMI/USB போர்ட்கள் மூலம் ஸ்ட்ரீமிங் ஸ்டிக்குகள், கேமிங் கன்சோல்களை இணைத்துக் கொள்ளலாம்.
எடை - 8.7 பவுண்ட் (சுமார் 3.9 கிகிராம்) எடையுடன் எடுத்துச் செல்ல ஏதுவாக உள்ளது. அமேசானில் 4.4 ஸ்டார் மதிப்பெண் பெற்றுள்ளது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.