மணிக்கு 120 கி.மீ வேகத்தில் சீறிப்பாயும் முரசு புயல்: இன்சார்ட் செயற்கைக்கோள் அனுப்பிய பயங்கர படம்!

Published : Nov 02, 2026, 06:05 PM IST

வங்கக்கடலில் உருவாகியுள்ள 'முரசு' தீவிரப் புயல் ஆந்திரக் கரையை நோக்கி மணிக்கு 22 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்தியாவின் INSAT-3DS உட்பட 3 செயற்கைக்கோள்கள் இதன் சுழற்சி மற்றும் மேக கட்டமைப்புகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.

PREV
14
வங்கக்கடலில் தீவிர முரசு புயல்

வங்கக்கடலில் உருவாகியுள்ள 'முரசு' தீவிரப் புயல் (Severe Cyclonic Storm Murasu) இந்தியக் கிழக்குக் கரையை, குறிப்பாக ஆந்திரப் பிரதேசத்தை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. செயற்கைக்கோள்கள் எடுத்துள்ள புகைப்படங்களில், சுழன்றடிக்கும் மேகக் கூட்டங்கள் மற்றும் ஒருங்கிணைந்த புயலின் கட்டமைப்பு மிகத் தெளிவாகப் பதிவாகியுள்ளது.

ஆந்திரக் கடலோர மாவட்டங்களில் பலத்த சூறைக்காற்று மற்றும் கனமழையை ஏற்படுத்தக்கூடிய இந்த புயலின் நகர்வுகள் மற்றும் மேகக் கட்டமைப்புகளை இந்தியாவின் INSAT-3DS உட்பட 3 முக்கியச் செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.

24
விண்வெளியில் இருந்து பார்க்கும் 'முரசு' புயல்

இந்தியாவின் INSAT-3DS செயற்கைக்கோளின் 'தெர்மல் இன்ஃப்ராரெட்' (Thermal Infrared) கேமரா, நவ.2-ஆம் தேதி காலை 10:00 மணி முதல் 10:27 மணி வரை எடுத்த புகைப்படங்களில், ஆந்திரக் கடலோரத்தை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் அடர்ந்த பிரகாசமான மேகக் கூட்டங்கள் திரண்டுள்ளதைக் காட்டுகின்றன. புயலைச் சுற்றி அமைந்துள்ள மேகக் கற்றைகள் அதன் சுழற்சி ஆற்றலையும், தென்னிந்தியா மற்றும் அதனை ஒட்டிய பெருங்கடல் பகுதியில் பரவியுள்ள பரந்த மேக மூட்டத்தையும் தெளிவுபடுத்துகின்றன.

34
கரை கடக்கும் நேரம் & காற்று வேகம்

இந்திய வானிலை மையத்தின் (IMD) தகவல்படி, நவம்பர் 2 காலை 8:30 மணி நிலவரப்படி, முரசு புயலானது கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 22 கி.மீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்துள்ளது. அப்போது, மேற்கு மத்திய வங்கக்கடலில் 14.1°N அட்சரேகை மற்றும் 81.4°E தீர்க்கரேகை பகுதியில் புயலின் மையம் அமைந்திருந்தது. இது:

நெல்லூருக்கு கிழக்கே-தென்கிழக்கே சுமார் 160 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு வடகிழக்கே 180 கி.மீ தொலைவிலும், காவாலிக்கு கிழக்கே-தென்கிழக்கே 180 கி.மீ தொலைவிலும், ஓங்கோலுக்கு தென்கிழக்கே 210 கி.மீ தொலைவிலும், மச்சிலிப்பட்டணத்திற்கு தெற்கே 240 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டிருந்தது.

முரசு புயல் தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதியான நெல்லூர் மற்றும் நர்சாபூருக்கு இடையே, ஓங்கோலுக்குத் தெற்கே தீவிரப் புயலாகக் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நவ.2 நள்ளிரவு 11:30 மணி முதல் நவ.3 அதிகாலை 4:00 மணிக்குள்ளான இடைப்பட்ட காலத்தில் புயல் கரையைக் கடக்க வாய்ப்புள்ளது. புயல் கரையைக் கடக்கும் தருணத்தில், மணிக்கு 100 முதல் 110 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். சில நேரங்களில் காற்றின் வேகம் மணிக்கு 120 கி.மீ வரை எட்டக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

44
மீட்புப் படைகள் தயார்நிலை

சமீபத்தில் 'அர்னாப்' புயல் தாக்கி வாரமே நிறைவடையாத நிலையில், தற்போது அடுத்ததாக 'முரசு' புயல் அச்சுறுத்துவது கிழக்குக் கடலோரப் பகுதி மக்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து, பேரிடர் மேலாண்மை முகமைகள் எச்சரிக்கையுடன் வைக்கப்பட்டு, கடலோரப் பகுதி மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் பணிகளும், கனமழை மற்றும் கடல் கொந்தளிப்பை எதிர்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வானிலை ஆய்வாளர்கள் தெர்மல் இன்ஃப்ராரெட் புகைப்படங்கள் மூலம் மேகங்களின் அடர்த்தி மற்றும் புயலின் நகர்வுகளை உடனுக்குடன் கண்காணித்து வருகின்றனர். ஆந்திராவின் பல பகுதிகளில் பலத்த காற்று, கனமழை மற்றும் கடல் கொந்தளிப்பு இருக்கும் என்பதால் கடலோர மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories