வெறும் ரூ.30ல் OTT திருவிழா..! அடிமட்ட ரேட்டில் கிடைக்கும் BSNL சினிமா பிளஸ்..!

Published : Oct 24, 2025, 08:41 PM IST

பிஎஸ்என்எல் புதிய Cinema Plus OTT திட்டம் மூலம் ₹30 மட்டும் செலவில் DD சேனல்கள் மற்றும் SonyLiv, Zee5 போன்ற OTT செயலிகளை காணலாம். குறைந்த செலவில் முழுமையான ஆன்லைன் பொழுது அனுபவிக்க விரும்புவோருக்கு சிறந்த தேர்வு ஆகும்.

PREV
14
பிஎஸ்என்எல் ஓடிடி திட்டம்

இந்தியாவில் பிஎஸ்என்எல் 4G சேவைகளை அறிமுகப்படுத்திய பிறகு, இப்போது அது OTT உலகிலும் வலுவாக நுழைந்துள்ளது. புதிய Cinema Plus திட்டம் ஒரு மாதத்திற்கு கேவலம் ரூ.30 செலவில் DD சேனல்கள் மற்றும் பல OTT சேவைகளை வழங்குகிறது. இது குறைந்த செலவில் SonyLiv, Zee5, Jio Cinema போன்ற பிரபல OTT செயலிகளைப் பார்க்க விரும்பும் பயனர்களுக்கு சிறந்த வாய்ப்பாகும்.

24
சினிமா பிளஸ்

Cinema Plus என்பது முன்பு YuppTV Scope என்று அறியப்பட்டிருந்த OTT பண்டில் சேவை. இப்போது அது சினிமா ப்ளஸ் என மறுபெயரிடப்பட்டுள்ளது. இந்த சேவை பிஎஸ்என்எல் FTTH (Fiber-to-the-Home) இணைய பயனர்களுக்கு மட்டும் கிடைக்கும். அதாவது, பிஎஸ்என்எல் ஃபைபர் இணையம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் மட்டுமே இதனைப் பெற முடியும்.

34
பிஎஸ்என்எல் மலிவான திட்டம்

Cinema Plus திட்டத்தில் பல சப்ஸ்கிரிப்ஷன் விருப்பங்கள் உள்ளன. மிகவும் மலிவானது ஒரு மாதத்திற்கு ரூ.30, இது DD சேனல்கள் மற்றும் Waves OTT அணுகலை வழங்குகிறது. ரூ.49, ரூ.199 மற்றும் ரூ.249 திட்டங்களும் உள்ளன. ரூ.199 திட்டத்தில் Sony Liv மற்றும் Jio Hotstar உள்ளது. ரூ.249 திட்டத்தில் Zee5 மற்றும் Lionsgate Play போன்ற பிரீமியம் சேவைகள் சேர்க்கப்பட்டுள்ளன. மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், இது மிகவும் மலிவான திட்டமாகும்.

44
சினிமா பிளஸ் பெறுவது எப்படி?

சினிமா பிளஸ் தொடங்க, உங்கள் பிஎஸ்என்எல் FTTH இணைப்புடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை பயன்படுத்தி விருப்பமான திட்டத்தை தேர்வு செய்யவும் செய்ய வேண்டும். பின்னர், பிஎஸ்என்எல் Cinema Plus போர்டலில் லாகின் செய்து விரும்பிய OTT உள்ளடக்கத்தை ஸ்ட்ரீம் செய்யலாம். பிஎஸ்என்எல் நிறுவனம் 1 லட்சம் புதிய 4G டவர்களை நிறுவி மேம்பட்ட இணைப்பு வழங்கியுள்ளது. மேலும், 5G சேவையை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories