CERT-In வெளியிட்டுள்ள ஆலோசனையின்படி (Advisory), ஹேக்கர்கள் இந்தச் சிக்கல்களைப் பயன்படுத்தி பயனர்களின் தொலைபேசிகளின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றலாம், அவர்களின் முக்கியமான தனிப்பட்ட தரவுகளைத் திருடலாம் அல்லது சாதனங்களைச் சிதைக்கலாம்.
• பாதிப்புக்குள்ளாகும் OS: ஆண்ட்ராய்டு 13 (Android 13) மற்றும் அதற்கு மேற்பட்ட பதிப்புகளில் இயங்கும் ஸ்மார்ட்ஃபோன்கள் மற்றும் டேப்லெட்டுகள் பாதிக்கப்படலாம். இன்றைய சந்தையில் உள்ள பெரும்பாலான புதிய மாடல்கள் இந்த OS பதிப்பைக் கொண்டுள்ளதால், ஒரு பெரிய பயனர் சமூகம் ஆபத்தில் உள்ளது.
• பிராண்டுகள்: சாம்சங், ஒன்பிளஸ், ரியல்மி, ரெட்மி, சியோமி, ஒப்போ, விவோ, மோட்டோரோலா மற்றும் கூகுள் பிக்சல் போன்ற பல பிரபலமான நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் இந்த அச்சுறுத்தலுக்கு ஆளாகின்றன.
• சிப் சிக்கல்: இந்தச் சிக்கல்கள், பெரும்பாலும் குவால்காம் (Qualcomm), மீடியாடெக் (MediaTek), என்விடியா, பிராட்காம் மற்றும் யூனிசோக் (Unisoc) போன்ற நிறுவனங்களின் சிப்களுடன் (Chips) இணைக்கப்பட்டுள்ளன. இந்தச் சிப்கள் ஆண்ட்ராய்டு போன்கள், ஸ்மார்ட் டிவிகள் மற்றும் டேப்லெட்டுகள் எனப் பல சாதனங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.