டேட்டா, எஸ்எம்எஸ்
இந்த திட்டம் 150 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாகும். முதல் 30 நாட்களுக்கு உள்ளூர் மற்றும் எஸ்.டி.டி நெட்வொர்க்குகளில் இலவச அழைப்புகள் மேற்கொள்ளலாம். 30 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் இலவசமாக வழங்கப்படும். முதல் 30 நாட்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா என மொத்தமாக 60 ஜிபி டேட்டா கிடைக்கும். தினசரி வரம்புக்குப் பிறகு 40 kbpsவேகத்தில் டேட்டாவை பயன்படுத்த முடியும்.
முழு காலத்திற்கும் டேட்டா நன்மைகள்
இந்த திட்டத்தில் கால்ஸ், டேட்டா 30 நாட்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்டாலும் 150 நாட்களுக்கு சிம்மை ஆக்டிவேட்டில் வைத்திருக்க முடியும். இதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் 160 நாள் செல்லுபடியாகும் பிஎஸ்என்எல் ரூ.997 திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது. முழு காலத்திற்கும் டேட்டா நன்மைகளை விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த திட்டமாகும்.
ஒரு வருஷம் ரீசார்ஜ் அவசியமில்லை! ஓடிடி + பல்க் டேட்டா! ஜியோவின் சூப்பர் பிளான்!