BSNL Plans
இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடோபோன்ஐடியா ஆகிய தனியார் நிறுவனங்கள் தொலைத்தொடர்பு சேவையை வழங்கி வருகின்றன. இந்த நிறுவனங்கள் அனைத்தும் மாதாந்திர, வருடாந்திர ரீசார்ஜ் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இந்த நிறுவனங்கள் சலுகையை வழங்கினாலும் அண்மை காலமாக கட்டணத்தை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இதனால் அரசு தொலைத்தொடர்பு துறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) பக்கம் வாடிக்கையாளர்கள் சாய்ந்து வருகின்றனர். தனியார் தொலைத் தொடர்பு துறை நிறுவனங்கள் 5ஜி வரை சென்று விட்டன. ஆனால் பிஎஸ்என்எல் இன்னும் 4ஜி சேவையை தொடங்கவில்லை. ஆனாலும் பிஎஸ்என்லுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் மவுசு அதிகரித்து இருப்பதற்கு குறைந்த கட்டணத்தில் சேவை வழங்கி வருவதே காரணமாகும்.
BSNL One Year Plans
புத்தாண்டு பிறந்து விட்ட நிலையில், பெரும்பாலானோர் மாதம், மாதம் ரீசாஜ் செய்வதை தவிர்த்து ஒரு ஆண்டுக்கான ரீசார்ஜ் திட்டங்களை பலர் தேடி வருகின்றனர். அந்த வகையில் பிஎஸ்என்எல் ஓராண்டுக்கான பல்வேறு ரீசாஜ் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அது குறித்து விரிவாக பார்ப்போம்.
பிஎஸ்என்எல் ரூ.1198 திட்டம்: இந்த பட்டியலில் முதல் திட்டம் இதுவாகும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்களாகும். மேலும் வாடிக்கையாளர்களுக்கு 300 நிமிட குரல் அழைப்பு கிடைக்கும். இது தவிர 3 ஜிபி டேட்டா மற்றும் 12 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் 30 எஸ்எம்எஸ் சலுகையும் கிடைக்கும். பிஎஸ்என்எல் சிம்மை இரண்டாம் நிலை விருப்பமாக வைத்திருக்க விரும்புபவர்களுக்கு இந்த திட்டம் மிகவும் பொருத்தமானது.
உலகின் அதிவேக இண்டர்நெட் கொண்ட டாப் 10 நாடுகள்: இந்தியா எந்த இடத்தில் உள்ளது?
Budget recharge Plans in BSNL
பிஎஸ்என்எல் ரூ 1999 திட்டம்: ரூ.1999 விலை கொண்ட இந்த திட்டத்தில் 365 நாட்கள் வேலிடிடி கிடைக்கும். மேலும் அன்லிமிடெட் கால் மற்றும் மொத்தமாக 600ஜிபி அதிவேக டேட்டா கிடைக்கும். இது தவிர தினமும் 100 எஸ்எம்எஸ் இலவசமாக கிடைக்கும். இந்த திட்டத்தை பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தேர்வு செய்துள்ளனர்.
BSNL Best Plan
ரூ.2099 திட்டம்: ரூ.2099 திட்டம் 425 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது, இது GP-2 மற்றும் அதைத் தாண்டிய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். இது 395 நாட்களுக்கு அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் தினமும் 2ஜிபி டேட்டா, 395 நாட்களுக்கு தினமும் 100 எஸ்எம்எஸ்கள் அனுப்பும் வசதிகள் உள்ளன.
ரூ.2399 திட்டம்: இந்த திட்டம் 425 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கிறது. இது தவிர 395 நாட்களுக்கு அன்லிமிடெட் கால்ஸ், தினமும் 2ஜிபி டேடா, 100 எஸ்எம்எஸ்கள் போன்ற சலுகைகள் கிடைக்கும்.
இனி எல்லார் போன்லயும் வாட்ஸ் அப் பே தான்: NPCI வெளியிட்ட புத்தாண்டு அப்டேட்