பிஎஸ்என்எல் பயனர்களுக்கு ஜாக்பாட்; ஏர்டெல், ஜியோவை விட கம்மி விலை; 90 நாள் வேலிடிட்டி!

பிஎஸ்என்எல் ஏர்டெல், ஜியோவை விட குறைவான விலையில் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் பயனர்களுக்கு ஜாக்பாட்; ஏர்டெல், ஜியோவை விட கம்மி விலை; 90 நாள் வேலிடிட்டி!

இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடோபோன் ஐடியா ஆகிய தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களும், அரசு நிறுவனமான பிஎஸ்என்எல்லும் தொலைத்தொடர்பு சேவையை வழங்கி வருகின்றன. இந்த செல்போன் ரீசார்ஜ் நிறுவனங்கள் கால்ஸ் வசதி, எஸ்எம்எஸ் வசதி மற்றும் டேட்டா ஆகியவற்றை கொண்ட தொகுப்பு ரீசார்ஜ் திட்டங்களை தான் செயல்படுத்தி வந்தன. 

கால்ஸ் வசதி மற்றும் எஸ்எம்எஸ் வசதிகளுக்கு என்று தனியாக திட்டங்கள் ஏதும் இல்லை. இதனால் டேட்டா பயன்பாடு தேவையில்லாத வாடிக்கையாளர்களும் கால்ஸ் வசதி, எஸ்எம்எஸ் வசதி மற்றும் டேட்டா வசதி கொண்ட தொகுப்பு திட்டங்களை தான் ரீசார்ஜ் செய்ய வேண்டியதுள்ளது. இந்த தொகுப்பு திட்டங்களுக்கு கட்டணம் அதிகமாக உள்ளது. 

டிராய் போட்ட உத்தரவு

இதனால் கால்ஸ் வசதி மற்றும் எஸ்எம்எஸ் வசதிகளுக்கு என்று தனியாக திட்டங்கள் கொண்டு வர வேண்டும் என்று இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் உத்தரவிட்டது. இதன்பிறகு ஜியோ, ஏர்டெல், வோடோபோன் ஐடியா  கால்ஸ் மற்றும் எஸ்எம்எஸ்களுக்கு தனியாக பிளான்களை கொண்டு வந்ததுள்ளன.

ஆனால் பிஎஸ்என்எல் இந்த இரண்டு நிறுவனங்களை தூக்கி சாப்பிடும் வகையில் மலிவு விலையில் கால்ஸ் வசதி மற்றும் எஸ்எம்எஸ் வசதிகளுக்கு என்று தனியாக ஒரு பிளானை கொண்டு வந்துள்ளது.

ரீசார்ஜ் செய்வில்லை என்றாலும் சிம் ஆக்டிவாக இருக்கும்! Trai சொல்லும் குட் நியூஸ்


பிஎஸ்என்எல் பிளான்

அதாவது பிஎஸ்என்எல் ரூ.439 என்ற விலையில் இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த பிளான் 90 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 700 எஸ்எம்எஸ்கள் உங்களுக்கு கிடைக்கும். ஜியோ இதே திட்டத்தை ரூ.448 விலையில் செயல்படுத்தி வரும் நிலையில், பிஎஸ்என்எல் ரூ.439 பிளான் அதை விட மலிவு விலையில் உள்ளது.

பிஎஸ்என்எல் பெஸ்ட் பிளான்

மேலும் ஏர்டெல்லின் இதே திட்டம் ரூ.469 என்ற நிலையில் இருக்கும்போது, பிஎஸ்என்எல் ரூ.439 பிளான் இதை விட 30 ரூபாய் கம்மியாக உள்ளது. இந்த பிளானில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் 84 நாட்களே வேலிடிட்டி வழங்கும் நிலையில், ஜியோ 90 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. 

அதே வேளையில் எஸ்எம்எஸ்களை பொறுத்தவரை ஜியோ (900  எஸ்எம்எஸ்கள்), ஏர்டெல் (1000 எஸ்எம்எஸ்கள்) விட பிஎஸ்என்எல் (700 பிஎஸ்என்எல்) கம்மியாக கொடுக்கிறது. மற்றபடி குறைந்த விலையில் வேலிடிட்டி அதிகம் வழங்குவதால் ஜியோ, ஏர்டெல்லை விட பிஎஸ்என்எல் பிளான் தான் சிறந்து விளங்குகிறது. 

ஜியோவின் புதிய 'சவுண்ட் பே' அம்சம் அறிமுகம்! எதற்காக தெரியுமா?
 

Latest Videos

click me!