₹3,000-க்கு குறைவான விலையில், ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3 ப்ரோ சிறந்த தேர்வாக உள்ளது. இதன் ஓவல் வடிவ டூயல்-டோன் சார்ஜிங் கேஸ் தனித்துவமானது. அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் மற்றும் ஃபிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின்போது, இதன் விலை ₹2,099 ஆக இருக்கும் (வங்கி தள்ளுபடி உட்பட). இது 12.4மிமீ டைனமிக் டிரைவர்கள், ஏஎன்சி, கூகிள் ஃபாஸ்ட் பேய்ர் மற்றும் 44 மணிநேர பேட்டரி ஆயுள் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது. அதேபோல, boAt Nirvana X இயர்பட்ஸ் ₹1,999-க்கு கிடைக்கும். இதில், 10மிமீ டைனமிக் டிரைவர்கள், எல்டிஏசி கோடெக் ஆதரவு, மற்றும் 40 மணிநேர பிளேபேக் டைம் ஆகியவை உள்ளன.