சரசரவென குறைந்த ஆப்பிள் ஐபோன் 16, 16 பிளஸ் விலை.. ஐபோன் வாங்க சிறந்த நேரம்

Published : Sep 10, 2025, 01:28 PM IST

ஆப்பிள் iPhone 17 வெளியீட்டைத் தொடர்ந்து, இந்தியாவில் iPhone 16 மற்றும் iPhone 16 Plus விலைகளில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஐபோன் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வாங்க வேண்டிய நேரம் இதுவாகும்.

PREV
15
ஐபோன் 16 விலை குறைவு

ஆப்பிள் தனது புதிய ஐபோன் 17 (iPhone 17) மாடல்களை வெளியிட்டதைத் தொடர்ந்து, இந்தியாவில் உள்ள ஐபோன் 16 (iPhone 16) மற்றும் ஐபோன் 16 ப்ளஸ் (iPhone 16 Plus) மாடல்களின் விலையில் பெரிய குறைப்பு ஏற்பட்டுள்ளது. வழக்கமாக, ஆப்பிள் ஒவ்வொரு புதிய மாடலை வெளியிடும் போது, ​​முந்தைய மாடல்களின் விலையை குறைப்பது மரபாக உள்ளது. இதன் மூலம், இந்த புதிய மாடல்களை விரும்பாதவர்களுக்கு குறைந்த விலையில் பிரீமியம் ஸ்மார்ட்போன் வாங்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

25
ஐபோன் 16 அம்சங்கள்

அம்சங்களைப் பார்க்கும்போது, ​​iPhone 16 மாடல் 6.1 இன்ச் Super Retina XDR டிஸ்ப்ளேவுடன் வருகிறது. அதேசமயம், iPhone 16 Plus-ல் 6.7 இன்ச் பெரிய திரை உள்ளது. இரண்டிலும் A18 சிப் செயலி பொருத்தப்பட்டுள்ளது. இந்த சிப், வேகமான செயல்திறன், சிறந்த பேட்டரி பயன்முறை, மற்றும் மேம்பட்ட கிராபிக்ஸ் அனுபவத்தை வழங்குகிறது.

35
ஆப்பிள் இந்தியா சலுகை

கேமரா அம்சங்களில், இரண்டு மாடல்களும் மேம்பட்ட டூயல் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இரவில் கூட தெளிவான புகைப்படங்களை எடுக்கச் செய்யும் Night Mode, 4K வீடியோ பதிவு, மற்றும் மேம்பட்ட Portrait அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இதனால், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் வீடியோ உருவாக்குபவர்கள் கூட இந்த மாடல்களை விரும்புகின்றனர்.

45
ஐபோன் 16 பேட்டரி ஆயுள்

பேட்டரி ஆயுள் தொடர்பாக, iPhone 16 20 மணி நேரம் வீடியோ பிளேபேக் வழங்கும் திறன் கொண்டது. அதேசமயம், iPhone 16 Plus 26 மணி நேரம் தொடர்ச்சியாக வீடியோ பிளேபேக் செய்யும் திறனைக் கொண்டுள்ளது. மேலும், இரண்டு மாடல்களிலும் MagSafe வயர்லெஸ் சார்ஜிங் வசதி உள்ளது. இதனால், பயனர்கள் கேபிள் பயன்படுத்தாமல் எளிதாக சார்ஜ் செய்ய முடியும்.

55
ஆப்பிள் ஐபோன் விலை குறைப்பு

இதன் மூலம், இந்தியாவில் பழைய மாடல் வாங்க விரும்பும் பயனர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும், ஆப்பிள் தற்போது ரூ.10,000 வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. புதிய விலைகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. iPhone 16 மாடலின் 128GB பதிப்பு தற்போது ரூ.69,900க்கு விற்கப்படுகிறது. அதேபோல, iPhone 16 Plus மாடலின் விலை ரூ.79,900 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories