Amazon Prime Day: அமேசான் ரசிகர்களுக்கு சூப்பர் நியூஸ்! 72 மணி நேர மெகா சேல்... தவறவிடாதீர்கள்

Published : Jun 19, 2026, 09:08 AM IST

Amazon Prime Day: அமேசான் தனது 10வது ஆண்டு பிரைம் டே சேலை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது. 72 மணி நேரம் நடைபெறும் இந்த மெகா சேலில் ஆயிரக்கணக்கான பொருட்களுக்கு தள்ளுபடி, புதிய தயாரிப்பு அறிமுகங்கள் மற்றும் வங்கி சலுகைகள் வழங்கப்படுகின்றன.

PREV
14
அமேசான் பிரைம் டே அறிவிப்பு

ஆன்லைன் ஷாப்பிங் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அமேசான் பிரைம் டே 2026 சேல் தேதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. அமேசானின் 10வது ஆண்டு பிரைம் டே கொண்டாட்டமாக, இந்த மெகா சேல் ஜூலை 4 நள்ளிரவு முதல் ஜூலை 6 இரவு வரை தொடர்ந்து 72 மணி நேரம் நடைபெறுகிறது. பிரைம் உறுப்பினர்களுக்கு மட்டும் இந்த சிறப்பு விற்பனை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரமான பொருட்கள், அசத்தலான தள்ளுபடிகள், புதிய தயாரிப்பு அறிமுகங்கள் மற்றும் பல்வேறு சிறப்பு சலுகைகள் இடம்பெறப்போகிறது.

24
வங்கி ஆஃபர்கள், மெம்பர்ஷிப் விலை குறைப்பு

இந்த சேலின் போது எஸ்பிஐ மற்றும் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு அல்லது இஎம்ஐ மூலம் வாங்குபவர்களுக்கு 10 சதவீதம் வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. அமேசான் பே ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு பயனர்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களில் 5 சதவீதம் கேஷ்பேக்கும் கிடைக்கும். மேலும், ஆண்டு பிரைம் மெம்பர்ஷிப் ரூ.1,499-லிருந்து ரூ.999-ஆகவும், பிரைம் லைட் ரூ.799-லிருந்து ரூ.599-ஆகவும், பிரைம் ஷாப்பிங் பதிப்பு ரூ.399-லிருந்து ரூ.299-ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

34
500 புதிய தயாரிப்புகள்

இந்த ஆண்டு பிரைம் டே சேலில் OnePlus, Samsung உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் 500-க்கும் மேற்பட்ட புதிய தயாரிப்புகள் அறிமுகமாகின்றன. அதோடு, 'ரூஃபஸ்' ஏஐ உதவியாளர், லென்ஸ் ஏஐ, ஏஐ ரிவ்யூ ஹைலைட்ஸ், க்விக் வியூ, பையிங் கைட்ஸ் உள்ளிட்ட புதிய ஸ்மார்ட் அம்சங்களும் வாடிக்கையாளர்களின் ஷாப்பிங் அனுபவத்தை மேம்படுத்துகின்றன. எக்கோ, அலெக்ஸா மற்றும் பையர் டிவி சாதனங்களுக்கு 45 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோரின் தயாரிப்புகளுக்கும் இந்த சேலில் முக்கிய இடம் அளிக்கப்பட்டுள்ளது.

44
வாங்குவதற்கு முன் திட்டமிடுங்கள்

பிரைம் டே சேலில் அதிக தள்ளுபடி கிடைக்கும் பொருட்கள் மிக விரைவாக விற்றுத் தீரும் வாய்ப்பு உள்ளது. எனவே, தேவையான பொருட்களை முன்கூட்டியே விருப்பப்பட்டியலில் சேர்த்து, வங்கி சலுகைகள் மற்றும் மெம்பர்ஷிப் தள்ளுபடிகளை பயன்படுத்தினால் அதிக சேமிப்புடன் ஷாப்பிங் செய்ய முடியும்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories