புதிய மொபைல் வாங்க போறீங்களா.. வெயிட் பண்ணுங்க பாஸ்.. அமேசானில் மொபைல் ஆஃபர் வந்தாச்சு!

First Published | Aug 3, 2024, 9:44 AM IST

அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனை இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. அமேசான் இந்தியா விற்பனை இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக ஆகஸ்ட் 6 ஆம் தேதி தொடங்கும். மொபைல்கள் மற்றும் ஆக்சஸெரீகளுக்கு 40 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குவதாக அறிவித்துள்ளது.

Amazon Great Freedom Festival

அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனை இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. எஸ்பிஐ வங்கி அட்டைகளுக்கு 10 சதவீதம் வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படும். அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனைக்கான டீஸர் பக்கத்தில், நிகழ்வின் போது பெரிய தள்ளுபடியைப் பெறும் பல போன்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.

Amazon Sale

ஒன்ப்ளஸ் நிறுவனத்தை சேர்ந்த மொபைல்களான OnePlus Nord CE 4 Lite, OnePlus Nord 4, OnePlus Nord CE 4, OnePlus Open, OnePlus 12R மற்றும் OnePlus 12 ஆகியவை குறைந்த விலையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல ஐகியூ  ஸ்மார்ட்போன்கள் ஆன iQOO Z9 Lite 5G, iQOO 12 5G, iQOO Neo 9 Pro, iQOO Z7 Pro, iQOO Z9 மற்றும் iQOO Z9x போன்ற iQOO போன்களும் கவர்ச்சிகரமான தள்ளுபடியுடன் விற்பனையில் இடம்பெறும்.

ஆஃபர்களை வாரி வீசும் Amazon.. அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் எவையெல்லாம் வாங்கலாம்?

Tap to resize

Mobile Phones Offers

ரெட்மியில் Redmi 13 5G, Redmi Note 13 Pro, Redmi 12 5G, Note 13 Pro+, Xiaomi 14 மற்றும் பல மாடல்களில் நல்ல டீலை பெறலாம். சாம்சங் நிறுவனத்தின் கேலக்சி எம் 15, கேலக்சி ஏ35 மற்றும் பல மொபைல்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கும். போக்கோ நிறுவனத்தின் Poco M6 Pro, Poco C65, Oppo F27 Pro+, Tecno Pova 6 Pro, Tecno Spark 20 Pro, Realme Narzo 70 Pro போன்ற குறைந்த விலையில் வழங்கப்பட உள்ள ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் அடங்கும்.

Smartphones Deals

அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனைப் பக்கத்தின்படி, வாடிக்கையாளர்கள் ரூ. 10,000 வரை கூப்பன் தள்ளுபடிகள், எக்ஸ்சேஞ்ச் சலுகைகளில் ரூ. 50,000 வரை தள்ளுபடி மற்றும் பல்வேறு டீல்களைப் பெறுவார்கள். குறைந்த விலையில் நல்ல தரமான மொபைல் போன்கள் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் நிச்சயம் அமேசானின் இந்த கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் மூலம் வாங்கி பயனடையலாம்.

உங்கள் வீட்டுக்கு தேவையான பொருட்கள்.. இப்போது சலுகை விலையில்.. அமேசானில் மிஸ் பண்ணக்கூடாத டீல்கள்!

Latest Videos

click me!