Airtel Black Plan
நீங்கள் வீட்டிற்கு நல்ல வைஃபை பெற திட்டமிட்டால், ஏர்டெல் பிளாக் திட்டத்தை பயன்படுத்தலாம். இதன் மூலம் வைஃபை மற்றும் டிடிஎச், OTT மற்றும் லேண்ட்லைன் இணைப்பு கிடைக்கும். ஒரே திட்டத்தில் WiFi + DTH + OTT + லேண்ட்லைன் வசதியை வழங்க ஏர்டெல் பிளாக் என்ற சிறப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
Airtel Black Plan
இந்த அனைத்து சேவைகளுக்கும் தனித்தனியாக கட்டணம் செலுத்தினால் ரூ.2199 செலுத்த வேண்டும். ஆனால் ஏர்டெல் பிளாக் திட்டத்தில் சேர்ந்தால் மாதத்திற்கு ரூ.699 (வரிகளும் சேர்த்து) கட்டணத்தில் இந்த அனைத்து வசதிகளும் வழங்கப்படுகிறது. 40 mbps ஸ்பீடு கொண்ட ஏர்டெல் பிராட்பேண்ட் இணைப்பு மட்டும் மாதத்திற்கு ரூ 499 (வரிகளும் சேர்த்து) ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Airtel Black Plan
ஏர்டெல் பிளாக் திட்டத்தில் தனித்தனியாகக் கட்டணம் வசூலிப்பதில்லை; அனைத்து சேவைகளும் ஒரே பில்லில் அடங்கும். அதாவது, ஒரு பில்லுக்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும். எல்லா வசதிகளும் கிடைக்கும். இது 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ஒரு போஸ்ட்பெய்ட் திட்டம். இத்திட்டத்திற்கு ஆகும் தினசரி செலவைக் கணக்கிட்டால், ஒரு நாளைக்கு 24 ரூபாய்தான் வருகிறது.
Airtel Black Plan
ஏர்டெல் பிளாக் திட்டம் 40mbps இணைய வேகத்தை வழங்குகிறது. இந்த திட்டத்தில் கிடைக்கும் லேண்ட்லைன் இணைப்பின் மூலம் எத்தனை போன் கால்களையும் இலவசமாகப் பேசிக்கொள்ளலாம். இது தவிர, வாடிக்கையாளர்கள் ரூ.300 மதிப்புள்ள டிவி சேனல்களுடன் டிடிஎச் (டைரக்ட்-டு-ஹோம்) இணைப்பையும் பார்த்து ரசிக்கலாம்.
Airtel Black Plan
இந்த திட்டத்தில் 350+ DTH சேனல்கள் உள்ளன. இந்த திட்டத்தில் இணையும் பயனர்கள் டிஸ்னி + ஹாட்ஸ்டார், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப் உள்ளிட்ட 12 OTT தளங்களின் சந்தாவையும் கூடுதல் கட்டணம் இல்லாமல் பார்த்து மகிழலாம்.
ஏர்டெல்லின் ரூ.699 திட்டத்திறகு Airtel.in இணையதளத்தில் ரீசார்ஜ் செய்யலாம். இந்த திட்டம் இப்போது டெல்லி, மும்பை, பெங்களூர் போன்ற பெரிய நகரங்களில் கிடைக்கிறது.