யூடியூப் விளம்பரங்களுக்கு AI குறி! ஜெமினி உதவியுடன் 'பீக் பாயிண்ட்ஸ்' அறிமுகம்

Published : May 17, 2025, 09:27 PM IST

யூடியூப் ஜெமினி உதவியுடன் 'பீக் பாயிண்ட்ஸ்' அறிமுகம்! அதிக பார்வையாளர்கள் இருக்கும்போது விளம்பரங்களைச் செருக AI உதவும். சிறந்த விளம்பர நேரங்களை அறிந்துகொள்ளுங்கள். 

PREV
15
பார்வையாளர்கள் ஈடுபாட்டின் உச்சத்தில் விளம்பரங்கள்

யூடியூப் தனது விளம்பரதாரர்களுக்காக ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு (AI) அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 'பீக் பாயிண்ட்ஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த அம்சம், ஜெமினி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு வீடியோவில் பார்வையாளர்கள் எந்த நேரத்தில் அதிக ஈடுபாட்டுடன் இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்து, அந்த நேரத்தை விளம்பர இடமாக மாற்றும். இதன் மூலம் விளம்பரங்களின் Reach அதிகரிக்கப்படும் என்று யூடியூப் தெரிவித்துள்ளது.

25
வருவாயை அதிகரிக்கும் புதிய முயற்சி

யூடியூபிற்கு விளம்பரங்கள் ஒரு முக்கிய வருவாய் ஆதாரமாக உள்ளன. இது நிறுவனத்திற்கு வருவாயை மட்டுமல்லாமல், வீடியோக்களைப் பணமாக்கவும், அதில் இருந்து வரும் வருவாயை கிரியேட்டர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் உதவுகிறது. முன்பு வீடியோவின் தொடக்கத்தில் விளம்பரங்களை வைப்பது, தவிர்க்க முடியாத விளம்பரங்களைச் சேர்ப்பது போன்ற முறைகளை யூடியூப் பின்பற்றியது. தற்போது பார்வையாளர்கள் அதிக ஈடுபாட்டுடன் இருக்கும் தருணங்களில் விளம்பரங்களைச் சேர்ப்பதன் மூலம் அதிக கவனம் பெற முடியும் என்று நம்புகிறது.

35
ஜெமினியின் துல்லியமான பகுப்பாய்வு

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பீக் பாயிண்ட்ஸ் அம்சம், ஜெமினி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வீடியோக்களைப் பகுப்பாய்வு செய்து, பார்வையாளர்கள் எந்த தருணத்தில் அதிக ஈடுபாட்டுடன் இருக்கிறார்கள் என்பதைக் கண்டறியும். இது ஒரு முக்கியமான காட்சி அல்லது ஒரு சுவாரஸ்யமான நிகழ்வுக்கு முந்தைய நொடியாக இருக்கலாம். 

45
ஜெமினி

ஒரு டெமோ வீடியோவில், ஒருவர் தனது காதலியைப் propose செய்வதற்கு சரியாக முன்பு ஒரு விளம்பரத்திற்கான இடத்தை ஜெமினி கண்டறிந்தது காட்டப்பட்டது. ஜெமினி வீடியோவின் ஒவ்வொரு Frame-ஐயும், அதன் வசனங்களையும் ஆராய்ந்து இந்தத் தருணங்களைக் கண்டறிகிறது.

55
பயனர் அதிருப்திக்கு வாய்ப்பு?

இந்த அம்சம் விளம்பரங்களின் Reachஐ அதிகரிக்கும் அதே வேளையில், முக்கியமான தருணங்களுக்கு முன்பு விளம்பரங்கள் தோன்றுவதால் பார்வையாளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. இந்த அம்சம் தற்போது சோதனை முயற்சியில் உள்ளது என்றும், இந்த ஆண்டு முழுவதும் பல்வேறு பிராந்தியங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories