உள்ளடக்க உருவாக்கத்தை எளிதாக்கும் நோக்கில் அடோப் வெளியிட்டுள்ள முக்கிய AI கருவிகள்:
• சவுண்ட் ட்ராக் உருவாக்கம் (Generate Soundtrack - Public Beta): யூடியூப் அல்லது இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களுக்காக, வீடியோவுக்கு ஏற்றவாறு உரிமமளிக்கப்பட்ட, தொழில்முறை தரமான பின்னணி இசையை இந்த வசதி உருவாக்குகிறது.
• பேச்சு உருவாக்கம் (Generate Speech - Public Beta): டெக்ஸ்ட்டை யதார்த்தமான குரல் பதிவாக மாற்றுகிறது. இதில் இந்திய மொழிகள் மற்றும் உச்சரிப்புகள் (தமிழ் உட்பட) அடங்கியுள்ளன. இது உள்ளூர்மயமாக்கப்பட்ட உள்ளடக்க உருவாக்கத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
• ஃபயர்பிளை வீடியோ எடிட்டர் (Firefly Video Editor - Private Beta): நேரத்தைக் கணக்கிட்டு எடிட் செய்யும் வசதி கொண்ட ஆன்லைன் வீடியோ எடிட்டர். இது குரல் பதிவு, சப்-டைட்டில் மற்றும் எஃபெக்ட்களைச் சேர்க்க உதவுகிறது.
• ப்ராம்ட் டு எடிட் (Prompt to Edit): 'பின்னணியை பிரகாசமாக்கு' அல்லது 'வானத்திற்கு ஆரஞ்சு நிறத்தை கொடு' போன்ற சாதாரண கட்டளைகளைக் கொடுத்து படங்களைத் திருத்த இந்த வசதி அனுமதிக்கிறது.