AI Powered Hacks உங்கள் டேட்டாவைக் குறிவைக்கும் ஏஐ ஹேக்கர்கள்! உங்கள் சமூக வலைதள கணக்குகள் மற்றும் போன் ஆபத்தில் உள்ளதை உணர்த்தும் 6 முக்கிய அறிகுறிகள் இதோ
AI Powered Hacks செயற்கை நுண்ணறிவு மூலம் பெருகும் சைபர் குற்றங்கள்
தொழில்நுட்பம் வளர வளர, அதைப் பயன்படுத்தி செய்யப்படும் மோசடிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி அடைந்துள்ள இந்த காலகட்டத்தில், சைபர் குற்றவாளிகள் மிக எளிதாகவும், அதிநவீன முறையிலும் மக்களிடம் இருந்து டேட்டாக்களை (Data) திருடி வருகின்றனர்.
AI-யைப் பயன்படுத்தி நொடிப்பொழுதில் பாஸ்வேர்டுகளை உடைப்பது, நம்பகமான நிறுவனங்களைப்போலவே போலியான மெசேஜ்களை அனுப்புவது போன்ற செயல்கள் மூலம் பலரது தனிப்பட்ட மற்றும் வங்கி விவரங்கள் திருடப்படுகின்றன. ஹேக்கர்கள் உங்கள் டேட்டாவைக் குறிவைத்துள்ளனர் என்பதை உணர்த்தும் சில முக்கிய எச்சரிக்கை அறிகுறிகள் உள்ளன. அந்த 6 அறிகுறிகள் என்னென்ன? அதில் இருந்து உங்கள் கணக்குகளைப் பாதுகாப்பது எப்படி என்பதைப் பற்றி இங்கே விரிவாகக் காண்போம்.
24
எதிர்பாராத லாகின் அலெர்ட்டுகள் மற்றும் பாஸ்வேர்ட் ரீசெட்
உங்கள் சமூக வலைதள கணக்கையோ அல்லது ஈமெயிலையோ வேறு எங்கிருந்தோ அல்லது வேறு ஒரு புதிய சாதனத்தில் இருந்தோ லாகின் செய்ய முயற்சிப்பதாக அடிக்கடி லாகின் அலெர்ட் (Login Alerts) வருகிறதா? அப்படியானால், ஹேக்கர்கள் ஏஐ (AI) டூல்களைப் பயன்படுத்தி உங்கள் பாஸ்வேர்ட்டை உடைக்க முயற்சிக்கிறார்கள் என்று அர்த்தம். இதேபோல், நீங்கள் கேட்காமலேயே பாஸ்வேர்ட் ரீசெட் (Password Reset) செய்வதற்கான ஈமெயில்கள் அல்லது ஓடிபி (OTP) வந்தாலும் ஆபத்துதான்.
ஹேக்கர்களுக்கு உங்கள் ஈமெயில் ஐடி தெரிந்திருக்கலாம், அதை வைத்து உங்கள் கணக்கிற்குள் நுழைய முயற்சி செய்கின்றனர் என்பதே இதன் பொருள். இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக உங்களின் பாஸ்வேர்ட்டை மாற்றுவதுடன், அனைத்து கணக்குகளுக்கும் டூ-ஸ்டெப் வெரிஃபிகேஷனை (Two-factor authentication) ஆன் செய்து வைப்பது மிக மிக அவசியம்.
34
கணக்கில் நடக்கும் வினோத செயல்பாடுகள் மற்றும் ஃபிஷிங் மெசேஜ்கள்
உங்கள் சோஷியல் மீடியா கணக்கிலிருந்து நீங்களே அனுப்பாத மெசேஜ்கள் நண்பர்களுக்குச் செல்வது, அல்லது நீங்கள் செய்யாத ஆன்லைன் பரிவர்த்தனைகள் நடப்பது போன்ற வினோதமான செயல்பாடுகளைக் கண்டால் உஷாராகி விடுங்கள். ஏஐ மூலம் நடக்கும் தாக்குதல்கள், சாதாரண பயனர்களின் செயல்பாடுகளைப் போலவே இருக்கும் என்பதால் தொடக்கத்தில் இதைக் கண்டுபிடிப்பது கடினம். உங்களை அறியாமலேயே ஹேக்கர்கள் உங்கள் கணக்கை ஓரளவு தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்கலாம்.
மேலும், திடீரென உங்கள் இன்பாக்ஸிலோ அல்லது வாட்ஸ்அப்பிலோ அதிகப்படியான மெசேஜ்கள் குவிகிறதா? வங்கிகள், பிரபல இ-காமர்ஸ் நிறுவனங்களில் இருந்து வருவது போல் தோற்றமளிக்கும் இந்த மெசேஜ்கள், உங்களை ஏமாற்றுவதற்காக ஏஐ மூலம் மிகத் துல்லியமாக உருவாக்கப்பட்ட ஃபிஷிங் (Phishing) மோசடியாக இருக்கலாம். அவசரமாக உங்களைச் செயல்படத் தூண்டும் இது போன்ற மெசேஜ்களில் வரும் எந்தவொரு லிங்கையும் (Links) எக்காரணம் கொண்டும் கிளிக் செய்யாதீர்கள்.
அறிமுகமில்லாத ஆப்கள் மற்றும் டேட்டா பயன்பாடு அதிகரிப்பு
உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப்பில் நீங்கள் இன்ஸ்டால் செய்யாத புதிய ஆப்கள் (Apps) அல்லது பிரவுசர் எக்ஸ்டென்ஷன்கள் (Extensions) இருக்கிறதா என்பதை அடிக்கடி செக் செய்யுங்கள். ஏஐ தொழில்நுட்பத்தில் இயங்கும் மால்வேர்கள் (Malware), சத்தமில்லாமல் உங்கள் போனில் புகுந்து உங்கள் தினசரி செயல்பாடுகளைக் கண்காணிப்பதுடன், பாஸ்வேர்டுகளையும் திருடும் வல்லமை கொண்டவை.
அதுமட்டுமின்றி, நீங்கள் போனை அதிகம் பயன்படுத்தாவிட்டாலும் உங்கள் மொபைல் டேட்டா வழக்கத்தை விட மிக வேகமாகத் தீர்ந்து போகிறதா? அல்லது உங்கள் சாதனம் எப்போதுமில்லாத அளவுக்கு மிகவும் மெதுவாகச் செயல்படுகிறதா? (Device slowdowns). இதுவும் பின்புலமாக இயங்கும் ஹேக்கிங் மென்பொருட்களின் அறிகுறியாக இருக்கலாம். இந்த ஆபத்துகளில் இருந்து தப்பிக்க, தொடர்ந்து உங்களின் போன் மற்றும் கம்ப்யூட்டரில் ஆன்டி-வைரஸ் ஸ்கேன் செய்வதோடு, தேவையில்லாத சந்தேகத்திற்குரிய ஆப்களை உடனடியாக டெலீட் செய்து விடுங்கள்!
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.