சாட்ஜிபிடி போன்ற AI சாட்பாட்களில் கேட்கவே கூடாத கேள்விகள்!

First Published | Dec 30, 2024, 11:59 PM IST

AI Chatbot Tips: சாட்போட்கள் உதவிகரமான கருவியாகத் தோன்றினாலும், சுகாதார ஆலோசனை போன்ற சில முக்கியமான தகவல்களுக்கு, அவற்றை நம்பி இருக்கக் கூடாது என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். ChatGPT மற்றும் பிற AI சாட்போட்களிடம் ஒருபோதும் சொல்லக்கூடாத அல்லது கேட்கக்கூடாத 7 விஷயங்களை வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

AI Chatbot User Guide

உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரி போன்ற உங்கள் தனிப்பட்ட தகவல்களை AI Chatbots உடன் ஒருபோதும் பகிர வேண்டாம். உங்களை அடையாளம் காணவும் உங்கள் செயல்பாட்டைக் கண்காணிக்கவும் இந்தத் தகவல் பயன்படுத்தப்படலாம்.

Dos and Don'ts in AI Chatbot

உங்கள் வங்கிக் கணக்கு எண்கள், கிரெடிட் கார்டு எண்கள், ஆதார் அட்டை எண், பான் கார்டு எண் போன்ற AI சாட்போட்களுடன் உங்கள் நிதி தொடர்பான தகவலைப் பகிர வேண்டாம். உங்கள் பணத்தை அல்லது உங்கள் அடையாளத்தைத் திருட இந்தத் தகவல் பயன்படுத்தப்படலாம்.

Tap to resize

Chatbot Tips

AI சாட்பாட்களில் உங்கள் பாஸ்வேர்டை ஒருபோதும் பகிர வேண்டாம். அது பல்வேறு இணையதளங்களில் உங்கள் கணக்குகளை அணுகவும் உங்கள் தரவைத் திருடவும் பயன்படுத்தப்படலாம்.

AI Chatbot Cautions

ஏ.ஐ. சாட்பாட்களில் உங்கள் ரகசியங்களைப் பகிர வேண்டாம். ChatGPT போன்ற சாட்பாட்கள் ஒரு நபரைப் போன்றவை அல்ல. அவை உங்கள் ரகசியங்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் என்று நம்ப முடியாது.

OpenAI

செயற்கை நுண்ணறிவு கருவிகள் மருத்துவராகச் செயல்பட முடியாது. எனவே சாட்பாட்களிடம் மருத்துவம் மற்றும் சுகாதார ஆலோசனையைக் கேட்க வேண்டாம். மேலும், இன்சூரன்ஸ் எண் மற்றும் உங்கள் உடல்நலம் தொடர்பான விவரங்களை ஒருபோதும் பகிர வேண்டாம்.

ChatGPT AI Chatbot

பெரும்பாலான சாட்போட்கள் தங்களுடன் பகிரப்பட்ட தகவல் அடிப்படையில் உங்களுக்குத் தரும் தகவல்களை பில்டர் செய்யக்கூடியவை. அது மட்டுமல்ல, இன்டர்நெட்டுக்குச் சென்றுவிட்டால், எதுவும் நிரந்தரமாக அழிந்துபோகாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ChatGPT

AI சாட்பாட்கள் நீங்கள் கூறும் எதையும் சேமித்து வைக்கலாம். அல்லது மற்றவர்களுடன் பகிரலாம் என்பதும் நினைவில் இருக்க வேண்டும். எனவே, யாருக்கும் தெரியக் கூடாது என்று கருதும் எதையும் AI சாட்போட்களிடம் சொல்லக்கூடாது.

Latest Videos

click me!