WhatsApp Tips and Tricks
நீங்கள் வாட்ஸ்அப் பயனராக இருந்து பல ஃபோன்களை வைத்திருந்தால், உங்கள் எல்லா சாதனங்களிலும் ஒரே நேரத்தில் ஒரே வாட்ஸ்அப் கணக்கைப் பயன்படுத்த விரும்பலாம். அதற்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள்? வாட்ஸ்அப் செயலியில் இருக்கும் நேரடியாக இணைக்கப்பட்ட சாதனங்கள் (Linked Devices) அம்சத்தைப் பயன்படுத்தி பல சாதனங்களில் ஒரே கணக்கில் உள்நுழைய முடியும். அது எப்படி செயல்படுகிறது என்று பார்க்கலாம்.
WhatsApp Update
இணைக்கப்பட்ட சாதனங்கள் (Linked Devices) அம்சத்தைப் பயன்படுத்தி மற்றொரு ஆண்ட்ராய்டு ஃபோன் அல்லது ஐபோனில் வாட்ஸ்அப் செயலிக்குள் நுழைவது எப்படி என்று முதலில் பார்ப்போம்.
WhatsApp Number
உங்கள் முதன்மை மொபைலில் WhatsApp செயலியைத் திறக்கவும். திரையின் மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகள் கொண்ட மெனுவைத் தட்டி, Linked Devices என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது புதிய சாதனத்தை இணைப்பதற்கான ஆப்ஷன் கிடைக்கும்.
WhatsApp Users
அதைத் தேர்வு செய்தவுடன் தோன்றும் QR குறியீட்டை உங்கள் இன்னொரு ஸ்மார்ட்ஃபோனில் இருந்து ஸ்கேன் செய்யவும். முன்பாக, இரண்டாவது மொபைலிலும் வாட்ஸ்அப் செயலி் நிறுவி இருப்பதை உறுதிசெய்யவும்.
Same WhatsApp Number in multiple devices
உங்கள் இரண்டாவது போனில் தனியாக ஒரு எண்ணைப் பயன்படுத்தினால், அந்த எண்ணைக் கொண்டு உள்நுழைவதைத் தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக, Login செய்யும்போது பின்வருவனவற்றைச் செய்ய வேண்டும்.
WhatsApp Hacks
மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகள் கொண்ட மெனுவைத் தொட்டு, இரண்டாவது மொபைலை ஒரு துணை சாதனமாக (Companion Device) இணைக்கும் ஆப்ஷனைத் தேர்வு செய்ய வேண்டும். உங்கள் இரண்டாவது போன் QR குறியீட்டை உருவாக்கும். அந்தக் குறியீட்டை உங்கள் முதன்மை மொபைல் மூலம் ஸ்கேன் செய்யவும். உடனே உங்கள் வாட்ஸ்அப் உரையாடல்கள் இரண்டாவது செல்போனிலும் தோன்றும். இரண்டிலும் ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியும்.