17 நாள் டிஜிட்டல் அரஸ்டு, 5.5 கோடி அபேஸ்... இந்த மாதிரி மோசடியில் இருந்து தப்புவது எப்படி?

First Published | Dec 17, 2024, 9:56 AM IST

Hyderabad Digital Arrest Case: ஹைதராபாத்தில் உள்ள பஷீர்பாக்கில் உள்ள ஒரு குடும்பம், 17 நாள் டிஜிட்டல் அரஸ்டு மோசடியில் சிக்கி 5.5 கோடி ரூபாயை இழந்துவிட்டது. இதுபோன்ற மோசடிகளில் சிக்காமல் பாதுகாப்பாக இருப்பதற்கு சில டிப்ஸ்.

Hyderabad Digital Arrest Case

ஆன்லைன் மூலம் அதிகரித்து வரும் மோசடிகளில் ஒன்று டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி. மோசடி செய்பவர்கள் வங்கி, காவல்துறை, சுங்கத்துறை போன்றவற்றில் பணிபுரியும் அதிகாரிகள் போல கூறிக்கொண்டு பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி, தண்டனையைத் தவிர்க்க பணத்தை அனுப்புமாறு வற்புறுத்துகிறார்கள்.

Online Scams

பொதுவாக டிஜிட்டல் அரஸ்ட் முறைகேடுகளில் தொடர்புடையை மோசடிக்காரர்கள் ஸ்கைப், வாட்ஸ்அப் போன்ற செயலிகள் மூலம் தொடர்புகொண்டு போலியான குற்றச்சாட்டுகளைக் கூறி மிரட்டுவார்கள். உங்களை டிஜிட்டல் கைது செய்திருக்கிறோம் என்றும் உங்கள் நடவடிக்கைகள் முழுமையாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன என்றும் சொல்வார்கள்.

Tap to resize

Digital Arrest Fruad

சட்டரீதியான நடவடிக்கைகளைத் தவிர்க்க தங்களுக்கு பணத்தை அனுப்புமாறு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கிறார்கள். புலனாய்வு அமைப்புகள் அல்லது காவல்துறை அதிகாரிகளைப் போலப் பேசி உடனடியாக பணத்தை அனுப்பாவிட்டால் சிறைக்குச் செல்ல வேண்டியிருக்கும் என எச்சரிப்பார்கள்.

Digital arrested scams

தொடர் அழுத்தத்துக்கு உள்ளான பலர் தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பெரிய தொகைகளை மோசடி பேர்வழிகள் கூறும் வங்கிக் கணக்கிற்கு அனுப்பிவிடுகிறார்கள். கிட்டத்தட்ட மொத்த பணத்தையும் கறந்த பிறகு, மோசடிக்காரர்களிடம் இருந்து எந்தத் தொடர்பும் இருக்காது. அப்போதுதான் பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டிருப்பதை உணர்கிறார்கள்.

Digital arrest safety tips

சரி, இத்தகைய மோசடிகளில் இருந்து உங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது? அரசு நிறுவனம் அல்லது சட்ட அமலாக்கத் துறைகளைச் சேர்ந்தவர்கள் எனக் கூறிக்கொண்டு யாராவது பேசினால், உடனே நம்பிவிடக் கூடாது. முதலில் அவர்களின் அடையாளத்தை சரிபார்க்க வேண்டும்.

Digital arrest cyber crime

வங்கிக் கணக்கு விவரங்கள், ஆதார் தகவல்கள், OTP போன்ற முக்கியமான விவரங்களை தொலைபேசியிலோ ஆன்லைனிலோ ஒருபோதும் யாரிடமும் பகிரவே கூடாது. மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் கடுமையான அழுத்தம் கொடுத்து பதற்றம் அடைய வைப்பார்கள். அதற்கு மசியாமல் அமைதியாக இருக்க வேண்டும். அப்போது குடும்பத்தினர் அல்லது நெருங்கிய நண்பர்களுடன் சிறிது ஆலோசனை செய்வது நல்லது.

Digital arrest helpline

சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டுகள் அல்லது அழைப்புகள் பற்றி சைபர் கிரைம் காவல்துறையினரிடம் புகார் அளிக்கலாம். நீங்கள் ஏதேனும் ஒரு மோசடியில் மாட்டிக்கொண்டிருப்பதாக சந்தேகித்தால், உடனடியாக புகார் கொடுக்கவும். 1930 என்ற உதவி எண்ணில் அழைத்து புகார் தெரிவிக்கலாம். https://cybercrime.gov.in/ என்ற அதிகாரபூர்வ இணையதளம் மூலமாகவும் புகார்களைப் பதிவுசெய்யலாம்.

Latest Videos

click me!