ஆதார் கார்டில் போட்டோ மாற்றுவது எப்படி? ஆன்லைன் அப்டேட் பண்ணலாம்!

First Published | Dec 5, 2024, 11:00 PM IST

ஆதார் அட்டைப் புகைப்படத்தைப் புதுப்பிக்க விரும்பினால் அதை எப்படிச் செய்யலாம் என்று இப்போது தெரிந்துகொள்ளுங்கள். ஆதார் புகைப்படத்தை மாற்றுவதற்கு முன் தெரிந்துகொள்ளவேண்டிய சில விஷயங்கள் உள்ளன.

Aadhaar Photo Update Online

ஆதார் திட்டம் இந்தியாவில் செப்டம்பர் 29, 2010 அன்று தொடங்கப்பட்டது. அதாவது கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாக மக்கள் ஆதாரை அடையாளச் சான்றாகப் பயன்படுத்துகின்றனர். ஆதார் அட்டையில் பயோமெட்ரிக் தகவல், புகைப்படங்கள், முகவரி, ஈமெயில் ஐடி, தொலைபேசி எண் உள்பட பல விவரங்கள் உள்ளன. அரசாங்க திட்டங்கள் உள்பட பல்வேறு சேவைகளைப் பெற ஆதார் அட்டையை பயன்படுத்தப்படலாம்.

Aadhaar Update

தரவுகளின் துல்லியத்தை உறுதிப்படுத்த, ஆண்டுதோறும் ஆதார் விவரங்களை புதுப்பிப்பது ஊக்குவிக்கப்படுகிறது. குறிப்பாக, பல ஆண்டுகளாக உங்கள் ஆதார் கார்டில் புகைப்படத்தை மாற்றாமல் இருந்தால், இப்போது அப்டேட் செய்யலாம். 15 வயதைக் கடக்கும் நபர்கள் தங்கள் புகைப்படம் உட்பட ஆதார் விவரங்களைப் புதுப்பிக்க வேண்டியது அவசியம் என ஆதார் ஆணையம் பரிந்துரை செய்கிறது.

Tap to resize

Update Photo in Aadhaar Card

உங்கள் ஆதார் அட்டைப் புகைப்படத்தைப் புதுப்பிக்க விரும்பினால் அதை எப்படிச் செய்யலாம் என்று இப்போது தெரிந்துகொள்ளுங்கள். ஆதார் புகைப்படத்தை மாற்றுவதற்கு முன் தெரிந்துகொள்ளவேண்டிய சில விஷயங்கள் உள்ளன. ஆதார் கார்டில் உள்ள பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம், மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் போன்ற விவரங்களை ஆன்லைனில் புதுப்பிக்க முடியும்.

Aadhaar Biometrics Update

ஆனால், கைரேகை, கருவிழி மற்றும் புகைப்படம் போன்ற பயோமெட்ரிக் விவரங்களை ஆன்லைனில் புதுப்பிக்க வழி இல்லை. இதுபோன்ற பயோமெட்ரிக் விவரங்களை மாற்ற அருகில் உள்ள ஆதார் மையத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு குறைந்த சேவைக் கட்டணத்தைச் செலுத்தி பயோமெட்ரிக் விவரங்களை மாற்றிக்கொள்ளலாம்.

UIDAI portal

ஆதார் ஆணையத்தின் (UIDAI) uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ஆதார் அப்டேட் செய்வதற்கான படிவத்தைப் டவுன்லோட் செய்யலாம். இதே படிவத்தை அருகில் உள்ள ஆதார் சேவை மையத்தில் இருந்தும் பெறலாம். படிவத்தில் தேவையான விவரங்களை நிரப்பி, ஆதார் மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

Aadhaar Seva Kendra

points.uidai.gov.in என்ற இணையதள முகவரிக்குச் சென்று அருகில் உள்ள ஆதார் மையத்தைத் தெரிந்துகொள்ளலாம். மையத்தில் இருக்கும் ஆதார் நிர்வாகி அனைத்து பயோமெட்ரிக் விவரங்களையும் சரிபார்த்து உறுதிப்படுத்துவார். புதிய புகைப்படத்தையும் எடுத்துப் பதிவேற்றுவார்.

What is Aadhaar URN number?

இந்த சேவைக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். புதிய புகைப்படத்துடன் அப்டேட் செய்யப்பட்ட ஆதார் கார்டு தயாராகிவிட்டதா என்பதைக் கண்காணிக்க URN எண்ணும் கிடைக்கும். ஆதார் ஆணையத்தின் இணையதளத்தில் இந்த எண்ணை பயன்படுத்தி அப்டேட் நிலவரத்தைத் தெரிந்துகொள்ளலாம்.

Download e-Aadhaar

ஆதார் அட்டையில் உள்ள தகவல்களைப் புதுப்பிக்க 90 நாட்கள் வரை ஆகலாம். உங்கள் அருகிலுள்ள ஆதார் பதிவு மையத்தில் ஒரு நகலை பெறலாம். அல்லது அதிகாரப்பூர்வ ஆதார் இணையதளத்தில் இருந்து மின்-ஆதார் (e-Aadhaar) அட்டையை டவுன்லோட் செய்யலாம்.

Latest Videos

click me!