வாட்ஸ்அப்பின் சமீபத்திய அப்டேட் "கஸ்டம் சாட் லிஸ்ட்" (Custom Chat List) என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் உங்கள் வாட்ஸ்அப் உரையாடல்களைக் குறிப்பிட்ட குழுக்களாகத் தொகுத்துக்கொள்ளலாம். பலவகையான உரையாடல்களை அணுகுவதற்கும் நிர்வகிப்பதற்கும் இந்த வசதியை உதவியாக இருக்கும்.
WhatsApp update
கஸ்டம் சாட் லிஸ்ட் அம்சத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்க்கலாம். அனைத்து சாட்களும் உள்ள பிரதான பகுதிக்குச் சென்று புதிய பட்டியலை உருவாக்கலாம். சர்ச் பாரில் உள்ள "+" பட்டனைத் தட்டவும். புதிய சாட் லிஸ்டுக்கு "Family", "Work", "Friends" போன்ற ஒரு பெயரை டைப் செய்யவும். இந்த லிஸ்டில் இடம்பெறவேண்டி சாட்களை தேர்வு செய்யவும். ஒரே பட்டியலில் பல உரையாடல்களைச் சேர்க்கலாம்.
WhatsApp update
உருவாக்கிய பிறகு சாட் லிஸ்டின் பெயரை மாற்றவும் வசதி உள்ளது. குறிப்பிட்ட சாட் லிஸ்டின் பெயரை சில நொடிகள் அழுத்தினால், "Rename" என்ற ஆப்ஷன் கிடைக்கும்.
இதே முறையில் குறிப்பிட்ட சாட் லிஸ்டை நீக்கவும் முடியும். அதற்கு "Delete" என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
வாட்ஸ்அப் ஃபில்டர் பாரில் தெரியும் சாட் லிஸ்ட் வரிசையை மாற்றி அமைக்கவும் முடியும். ஒவ்வொரு சாட் லிஸ்டையும் தொட்டு இழுத்து, அவற்றின் வரிசையை மாற்றலாம். இதன் மூலம் அடிக்கடி பயன்படுத்தும் உரையாடல்களை மேலும் விரைவாகவும் எளிமையாகவும் அணுக முடியும்.
கஸ்டம் சாட் லிஸ்ட்டை பயன்படுத்துவதன் வாட்ஸ்அப் உரையாடல்களை சிறந்த முறையில் நிர்வாகிக்கலாம். உரையாடல்களை அணுகும் வசதிக்கு ஏற்ப எளிதாக வகைப்படுத்தலாம். வெவ்வேறு வகையான லிஸ்டுகளில் உள்ள உரையாடல்களைப் பார்வையிடுவது சுலபமாக இருக்கும்.