உங்களிடம் பழைய ஸ்மார்ட்போன் உள்ளதா? அதை எளிமையாக ஸ்மார்ட் செக்யூரிட்டி கேமராவாக மாற்ற முடியும்! குறைந்த செலவில் சிசிடிவி கேமராவை நிறுவ இது ஒரு சிறந்த தீர்வாக இருக்கும்.
முதலில் பழைய மொபைலில் கண்காணிப்பு கேமராவுக்கான செயலியை இன்ஸ்டால் செய்யவும். ஆல்ஃபிரட் கேமரா போன்ற பல செயலிகள் ஆப் ஸ்டோரில் கிடைக்கும். அதில் ஒரு கணக்கை உருவாக்கி தேவையான அடிப்படை செட்டிங்கை அமைத்துக்கொள்ளவும்.
25
Stably mount your phone
நுழைவாயில், ஜன்னல் போன்ற கண்காணிக்க விரும்பும் இடத்தில் மொபைலை வைக்கவும். ஸ்டாண்ட், ட்ரைபாட் அல்லது மவுண்ட்டைப் பயன்படுத்தி ஃபோன் நிலையாக இருப்பதை உறுதிசெய்யவும்.
35
Power source
மொபைல் போன் பாதுகாப்பு கேமராவாக தொடர்ந்து இயங்க, அதை ஒரு பவர் சோர்ஸுடன் இணைக்கவும். சார்ஜிங் கேபிள் அல்லது பவர் பேங்கைப் பயன்படுத்தவும். மொபைலில் பேட்டரி தீர்ந்துவிடாமல் பார்த்துக்கொள்ளவும்.
45
Live video
பழைய போனில் இன்ஸ்டால் செய்த செயலியை தற்போது பயன்படுத்தும் ஸ்மார்ட்போன், டேப்லெட் அல்லது கம்ப்யூட்டரிலும் நிறுவிக்கொள்ளவும். பழைய மொபைலில் பயன்படுத்திய அதே கணக்கில் லாக்-இன் செய்யவும். பழைய கேமராவில் பதிவாகும் காட்சியை இதிலும் லைவ்வாகப் பார்க்கலாம்.
55
Motion detection
நகர்வுகளைக் கண்டறியும் மோஷன் டிடெக்ஷன் ஆப்ஷனை ஆன் செய்வும். கேமரா முன்பு ஏதாவது நகர்வு தென்பட்டால் நோட்டிஃபிகேஷன் பெற முடியும். கண்காணிப்புக் கேமராவாக பயன்படுத்தும் மொபைலை பாதுகாப்பான வைஃபை நெட்வொர்க்குடன் இணைத்து, வலுவான பாஸ்வேர்டையும் பயன்படுத்தவும்.