Stay safe from scams
உங்கள் ஆன்லைன் தனியுரிமையை மேம்படுத்தவும் வலுப்படுத்தவும், ஆன்லைன் கணக்குகளுக்கு வலுவான மற்றும் தனித்துவமான பாஸ்வேர்டுகளைப் பயன்படுத்துவதை உறுதிசெய்யவும்.
Cyber fraud
பாஸ்வேர்ட் குறைந்தபட்சம் 12-16 எழுத்துக்கள் கொண்டிருப்பதை உறுதிசெய்யவும். அதில் எண்கள், குறியீடுகள், சிறப்பு எழுத்துகளையும் பயன்படுத்தவும். பாஸ்வேர்டுகளை உருவாக்க 1Password போன்ற இலவச பாஸ்வேர்ட் ஜெனரேட்டர்களையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
Online scams
2FA எனப்படும் 2 Factor Authentication மூலம் பயனர்கள் தங்கள் கணக்கில் உள்நுழைய கூடுதல் பாதுகாப்பை அமைக்கலாம். 2FA அம்சத்தை பயன்படுத்தினால், சைபர் தாக்குதல்களில் பாஸ்வேர்டு கசிந்தாலும், உள்ளே நுழைய 2FA குறியீடு தேவைப்படும். அது கணக்கு வைத்திருப்பவரின் மொபைல் எண்ணுக்கோ ஈமெயிலுக்கோ அனுப்பப்படும்.
Cyber Crime
ஆன்லைனில் வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் போன்ற தரவுகளை பாதுகாப்பாக வைத்திருக்க விரும்பினால், என்கிரிப்ஷன் அம்சத்தை பயன்படுத்துவதை உறுதிசெய்யவும். இது பயனரின் தரவுகள் யாருக்கும் கசியாமல் இருக்க உதவுகிறது. வாட்ஸ்அப் போன்ற செயலிகளில் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் ஆப்ஷ் உள்ளது. கூடுதல் பாதுகாப்புக்கு VPN நெட்வொர்க்குகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
VPN scams
பொது வைஃபை இணைப்புகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். ஏனெனில் மோசடி செய்பவர்கள் உங்கள் தனிப்பட்ட தகவலைப் பெற இது எளிதான வழியாகும். மீறி, பொது வைஃபையைப் பயன்படுத்த வேண்டியிருந்தால், VPN ஐப் பயன்படுத்தவும். அது பயனரின் இணைய இணைப்பை என்க்ரிப்ட் செய்து தரவைப் பாதுகாப்பாக வைத்திருக்கும்.
Online security
இந்த ஆண்டு, ஆன்லைன் மோசடிகளுக்கு ஆளாகாமல் இருக்க, மேலே குறிப்பிட்டுள்ள டிஜிட்டல் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை முயற்சிக்கவும். இதன் மூலம் உங்கள் தரவைப் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். சைபர் கிரிமினல்கள் உங்கள் கணக்குகளை அணுகுவதையும் தடுக்க முடியும்.