அடிக்கடி வெளிநாட்டு நம்பரில் இருந்து போன் வருதா? தவிர்ப்பது எப்படி?

Published : Jan 07, 2025, 09:41 PM ISTUpdated : Jan 07, 2025, 10:13 PM IST

தேவையற்ற சர்வதேச அழைப்புகளைத் தவிர்ப்பது எப்படி? மோசடி செய்பவர்களிடமிருந்து உங்களை எவ்வாறு பாதுகாப்பது ஆன்லைன் மோசடிகளில் சிக்காமல் இருக்க சில விஷயங்கள் உஷாராக இருப்பது நல்லது.

PREV
17
அடிக்கடி வெளிநாட்டு நம்பரில் இருந்து போன் வருதா? தவிர்ப்பது எப்படி?
Unwanted international calls

உங்கள் போனுக்கு சர்வதேச எண்களில் இருந்து அடிக்கடி அழைப்புகள் வருகிறதா? போலியான வேலை வாய்ப்புகள், லாட்டரியில் பரிசு அல்லது இலவசப் பொருள்கள் போன்ற கவர்ச்சிகரமான சலுகைகள் மூலம் மக்களை ஏமாற்றும் மோசடி கும்பல் அதிகரித்து வருகிறது. உண்மையில், இந்த அழைப்புகள் தனிப்பட்ட தகவலைத் திருடுவதற்கும், நிதி மோசடிகளைச் செய்வதற்கு இந்தத் தந்திரத்தை பயன்படுத்துகிறார்கள்.

27
International calls

அமெரிக்கா, ஈரான், ஓமன் மற்றும் பிற நாடுகளின் மொபைல் எண்களில் இருந்து இந்த மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இந்த அழைப்புகளுக்குப் பின்னால் பாதுகாப்பை தொடர்பான ஆபத்துகளும் இருக்கலாம். எனவே, அறியப்படாத சர்வதேச தொலைபேசி எண்களில் இருந்து வரும் அழைப்புகளை கையாள சில விஷயங்களை மனதில் கொள்ளவேண்டும்.

37
Spam calls

சர்வதேச எண்ணிலிருந்து வரும் எல்லா அழைப்புகளும் மோசடி நோக்கம் கொண்டவை அல்ல என்றாலும், பல அழைப்புகள் மோசடி அபாயம் உள்ளது. சில சமயங்களில், வெளிநாட்டில் இருந்து அழைப்பது உங்கள் நண்பர் அல்லது உறவினராக இருக்கலாம். பெரும்பாலும், வெளிநாட்டு எண்கள் மோசடி செய்பவர்களால் பயன்படுத்தப்படுகின்றன. eSIMகள் போன்ற சர்வதேச சிம் கார்டுகள் பரவலாக இருப்பதால், மோசடி செய்பவர்கள் உங்கள் அருகிலேயே இருந்தாலும், அவர்கள் வேறொரு நாட்டிலிருந்து அழைப்பது போல் தோன்றலாம்.

47
Online Spam Calls

மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் பல்வேறு வழிகளைப் பயன்படுத்துகின்றனர். சிலர் வெறுமனே மிஸ்டு கால் கொடுக்கிறார்கள். ஆர்வத்தின் காரணமாக நீங்கள் அவர்களை மீண்டும் அழைப்பீர்கள் என்று நம்புகிறார்கள். மற்றவர்கள் கூரியர் நிறுவனம் அல்லது வேலை வாங்கிக் கொடுக்கும் ஏஜென்சியில் இருந்து பேசுவதாகக் கூறுவார்கள். இப்படி யாராவது பேசினால், அந்த அழைப்பைப் புறக்கணிப்பது நல்லது.

இதுபோன்ற சூழலில் Truecaller போன்ற மொபைல் ஆப் பயனுள்ளதாக இருக்கும். அவை சந்தேகத்திற்கிடமான எண்களைக் கண்டறிந்து உங்களுக்குத் தெரியப்படுத்தும்.

57
Video Call Fraud

வெளிநாடு எணிகளில் இருந்து வரும் அழைப்புகளைத் தடுக்க முடியும். நீங்கள் வாட்ஸ்அப் மூலம் இந்த வகையான அழைப்புகளைப் பெறுகிறீர்கள் என்றால், அவற்றைத் தானாகத் தடுக்க "silent unknown calls" என்ற அம்சத்தை பயன்படுத்தலாம்.

67
Spam call fraud

தேவையற்ற சர்வதேச அழைப்புகளைத் தவிர்க்க பின்பற்றவேண்டிய ஒரு எளிய விதி, தொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள நாட்டின் குறியீடு என்ன என கவனிக்க வேண்டும். எண் +91 (இந்தியா) என்று தொடங்கவில்லை என்றால், அது சர்வதேச அழைப்பாக இருக்கலாம். +92 (பாகிஸ்தான்), +84 (வியட்நாம்), +62 (இந்தோனேசியா), +1 (அமெரிக்கா), அல்லது +98 (ஈரான்) போன்ற குறியீடுகளுடன் தொடங்கும் எண்கள் பெரும்பாலும் மோசடி நடவடிக்கைகளுடன் தொடர்புடையவையாக இருக்கக்கூடும். அந்த அழைப்புகளுக்கு பதிலளிப்பதைத் தவிர்ப்பது நல்லது.

77
Foreign call scams

சர்வதேச எண்களில் இருந்து நிறைய அழைப்புகள் வருகிறது என்றால், உங்கள் எண் பெரிய தரவு கசிவுக்கு ஆளாகியிருக்கலாம். டெலிகாம் நிறுவனத்தின் DND வசதியை செயல்படுத்தி, இந்த தேவையற்ற அழைப்புகளைக் குறைக்க முடியும்.

தொலைத்தொடர்பு வசதிகள் வழியாக மோசடிகளும் அதிகமாகி வருவதால் எப்போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஏதேனும் தவறாக நடப்பதாக உணர்ந்தால், தயங்காமல் அந்த எண்ணை பிளாக் செய்துவிடலாம். அதைப்பற்றி 1930 என்ற சைபர் கிரைம் உதவி எண்ணுக்குப் புகாரும் அளிக்கலாம். அது உங்களை மட்டுமின்றி மற்றவர்களையும் பாதுகாக்க உதவும்.

click me!

Recommended Stories